Laughing Buddha Feng Shui Tips: பெங் சுயி  என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக, நேர்மறை ஆற்றலை உண்டாக்கும் வகையிலான சீனாவில் புழக்கத்தில் உள்ள பாரம்பரிய விஷயங்கள். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. தற்காலத்தில் பெங் சுயி என்பது, சீனாவின் எல்லைகளைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங் சுய் நடைமுறையில் சிரிக்கும் புத்தருக்கு (Laughing Buddha) சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஃபெங் சுய\ய் நடைமுறையில் லாபிங் புத்தாவை, வீட்டில் வைத்திருப்பதால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை. இத்துடன் கடன் பிரச்னையும் விலகும். லாபிங் புத்தர் சிலை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் எப்படி வைத்தா அதிக பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


வீட்டின் பிரதான கதவுக்கு முன்னால் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க வேண்டும். இதன் காரணமாக, வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுகிறது. இது தவிர, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இது நல்ல உணர்வை கொடுக்கிறது. வீட்டுக்குள் வரும் அனைவருக்கும் தெரியும் வகையில் வீட்டு வாயில் அருகில் வைக்க வேண்டும். சிரிக்கும் புத்தரை படுக்கையறையில் வைக்கக் கூடாது.


ALSO READ |  Monthly Horoscope: தை மாதம் உங்கள் ராசிக்கு தித்திக்குமா? திகட்டுமா? தை மாத ராசிபலன்!


லாபிங் புத்தா சிலை இரண்டரை முதல் மூன்றடி உயரத்தில் இருந்தால், மிகவும் மங்களகரமானது. சிரிக்கும் புத்தர் சிலையை சமையலறையிலும் வைக்கக்கூடாது. வீட்டில் கருத்து வேறுபாடு நிலவினால், அமர்ந்திருக்கும் நிலையிலான லாபிங் புத்தா சிலை சிறந்த பலனளிக்கும். சிரிக்கும் புத்தரின் சிலை கைகளை உயர்த்தி ய நிலையில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல


சிரிக்கும் புத்தர் சிலைகள் சந்தையில் பல வடிவமைப்புகளில் காணப்படுகின்றன. ஆனால் வீட்டில்,  லாபிங் புத்தா, பைகளை ஏந்தி இருக்கும் லாபிங் புத்தா, உலோகத்தால் செய்யப்பட்ட லாபிங் புத்தா ஆகியவற்றை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது.


ஃபெங் சுய்  நடை முறையில், சிரிக்கும் புத்தர் உட்கார்ந்து சிரிப்பது மிகவும் நல்ல பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. சிரிக்கும் புத்தரை சரியான திசையில் வைத்திருப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது.  சிரிக்கும் புத்தர் சிலை கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சியைத் தரும். இதனுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை-வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR