ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகருக்கு ட்ரான்ஸ்வியா விமான சேவை நிறுவனத்தின் விமானம் சென்றுகொண்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பயணி ஒருவர் கட்டுப்பாடின்றி தொடர்ந்து வாயு வெளியிட்ட கொண்டே இருந்துள்ளார். இது அவருக்கு அருகாமையில் இருந்து இரு பயணிகளுக்கு மட்டுமின்றி ஒட்டு விமான பயணிகளுக்கும் சங்கடமாக அமைந்துள்ளது.


அவரால் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து வாயு வெளியிட்டு கொண்டே இருந்துள்ளார். இதனிடையே பயணிகள் சிலர் அந்த நபரிடம் சண்டைக்கு சென்றுள்ளனர். பிரச்னை பெரிதாகும் என்ற நிலை தெரிந்ததும் விமானி குறித்த விமானத்தை அவசரமாக வியன்னா விமான நிலையத்திற்கு திருப்பியுள்ளார்.


இதனையடுத்து விமானத்தில் சண்டையிட்டதாக கூறி 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை வியன்னா விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை ட்ரான்ஸ்வியா விமானத்தில் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளனர்.