உங்கள் தனிப்பட்ட நிதி நிலைமையை  சிறப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.   ஓய்வு காலத்தில் உங்களை நிதி ரீதியாகப் பாதுகாப்பதற்கு, உங்கள் வருமானத்தை எங்கு முதலீடு செய்வது, எப்படிச் சேமிப்பது மற்றும் கடன் மேலாண்மை போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதோடு பணத்தை திட்டமிட்டு சேமிப்பதன் மூலம் நீங்கள் எப்படி பணக்காரர் ஆகலாம் என்பதை பற்றி இன்று இங்கு கூறுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.  செலவை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்


பணத்தை சேமிப்பது ஒரு கலை. இதற்கு நீங்கள் முதலைல் செலவை கட்டுப்படுத்த  வேண்டும். இந்த வித்தைகளை எவ்வளவு விரைவில் கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் நிதியை சமநிலையில் வைத்திருக்க முடியும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதையோ அல்லது தேவையற்ற விஷயங்களுக்கு ஷாப்பிங் செய்வதையோ தவிர்க்கவும். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.


2. நிதி எதிர்காலத்திற்கான இலக்குகளை அமைக்கவும்


பணத்தை சேமிப்பது என்பது அனைவரும் நினைப்பது போல் எளிதானது அல்ல. பணத்தைச் சேமிக்கும் உத்தியை விளக்கும்  வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்கவும். இதன் மூலம் நீங்கள் பணத்தைச் சேமிப்பது பற்றி தெரிந்துகொள்ளவும், புரிந்து கொள்ளவும் மற்றும் பொருளாதார ரீதியாக வலுவாகவும் இருக்க முடியும்.


மேலும் படிக்க | ITR e-Verification: வருமான வரி தாக்கல் பற்றிய முக்கிய தகவல், UIDAI அளித்த எளிய வழிமுறை இதோ 


3. வரிகளை கணக்கிட்டு திட்டமிட்டு வரியை சேமிக்கவும்


உங்கள் வரிகளை கணக்கிட்டு தொடக்கத்தில் சம்பளம் கிடைக்கும்போது, ​​வருமான வரி செலுத்திய பிறகு உங்களிடம் சரியான அளவு பணம் இருக்குமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், அதோடு வரிகளை சேமிக்கவும் முறையாக திட்டமிடவும்.


4. செலவினங்களைக் கண்காணிக்கவும்


நிதித் திட்டமிடலின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, உங்கள் செலவுகளைக் கண்காணிப்பது. பணம் எங்கு, எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். செலவு செய்வதற்கு முன் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். எப்போதும் பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம் 


5. ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் 


பணத்தை சம்பாதிக்க விரும்பினால், முதலில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அதனால்தான் முதலில் மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் உங்களது அல்லது குடும்பத்தினர் எவருக்கேனும் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டால்,  சிகிச்சை ஏற்படும் செலவுகளை எளிதாக சமாளிக்கலாம். நிதி ரீதியாக வலுவாக இருக்க சுகாதார காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR