ஏற்றம் காணும் ட்ரோன் துறை; இந்த பங்கு முதலீட்டில் பம்பர் லாபம் பெறலாம்
இந்திய அரசு, கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன் மேம்படுத்தும் நோக்கில், கொள்கையை தாராளமயமாக்கி வருகிறது. ட்ரோன்கள் பாதுகாப்புத் துறைக்கு மட்டுமல்லாது, விவசாயம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பிற துறைகளிலும் அதன் பயன்பாடு தொடர்ந்து வருகிறது.
மத்திய அரசாங்கம் பாதுகாப்பு முதல் பல்வேறு துறைகளில் ட்ரோன்களின் தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் உயரலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய அரசு, கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன் மேம்படுத்தும் நோக்கில், கொள்கையை தாராளமயமாக்கி வருகிறது. இப்போது ட்ரோன்கள் பாதுகாப்புத் துறைக்கு மட்டுமல்லாது, விவசாயம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பிற துறைகளிலும் அதன் பயன்பாடு தொடர்ந்து வருகிறது. இதை அடுத்து, ட்ரோன் தயாரிப்புத் துறையிலும் விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதானி எண்டர்பிரைசஸ், ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற விவசாய ட்ரோன் ஸ்டார்ட்அப்பில் 50 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸைப் போலவே, இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (டிஏஎஸ்) நிறுவனத்தில் ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் 60 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
லாபம் ஈட்டும் 5 பங்குகள்
இப்போது அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான சப்ளை செயின் அமைப்பில் ட்ரோன்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் அனுமதிக்கும் வாய்ப்பு அதிகம். இந்திய ட்ரோன் சந்தையில் சமீபத்திய முன்னேற்றங்களை மனதில் வைத்து, சந்தை வல்லுநர்கள் ட்ரோன் துறையில் 5 நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பம்பர் லாபம் பெறலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
1. ஜென் டெக்னாலஜிஸ்
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம், சமீபத்தில் இந்திய விமானப் படையிடமிருந்து சுமார் ரூ.155 கோடி மதிப்பிலான மிகப்பெரிய ஆர்டரைப் பெற்றுள்ளது. ஆர்டர்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் பங்குகள் ரூ.167க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
2. பாராஸ் டிஃபென்ஸ்
பாராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வெளியீட்டு விலை ஒரு பங்கிற்கு ரூ.165-175 ஆக இருந்தது. இது NSE மற்றும் BSE பங்குச் சந்தையில், 2021, அக்டோபர் 1, தேதி அன்று சுமார் 170 சதவிகிதம் அளவிலான பம்பர் பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டது. தற்போது இது ரூ.597 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்
3. பாரத் எலக்ட்ரானிக்ஸ்
BEL இந்தியாவில் ட்ரோன் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம். இந்திய கடற்படைக்காக ட்ரோன்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது அதன் பங்கின் விலை ரூ.230 ஆக உள்ளது.
4. டிசிஎம் ஸ்ரீராம் இண்டஸ்ட்ரீஸ்
இந்த நிறுவனப் பங்குகள் பெரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில், இந்நிறுவனத்தின் பங்குகள், இதுவரை இல்லாத சாதனையை முறியடிக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிறுவனத்தின் பங்கு தற்போது ரூ.87 ஆக உள்ளது.
5. ரத்தனிந்தியா எண்டர்பிரைசஸ்
ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனமும் ட்ரோன்களின் தொழில்நுட்பத்தை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் இனிவரும் காலங்களில் மிகவும் அதிகரிப்பதைக் காணலாம். தற்போது இந்நிறுவனத்தின் பங்கின் விலை தற்போது 40 ரூபாய் ஆகும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR