ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆர்லாண்டோவில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் மீண்டும் திறக்கப்படுவதற்கான திட்டங்களுக்கு மாகாண அதிகாரிகள்  ஒப்புதல் அளித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாணை  குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாவல் கொரோனா வைரஸ் பெருந்தொற்று இன்னும் உலகிற்கு  ஒரு பெறும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், ​​கேளிக்கை  பூங்காக்களை மீண்டும் திறப்பது பற்றியும் அதன் ஆயத்த பணிகளை மேற்கொள்வது பற்றியும் டிஸ்னி ஒரு நெறிமுறையை ஆலோசித்து வருகின்றது. 


இந்நிலையில் ஜூன் 10-ஆம் தேதி முதல்  சீ வேர்ல்ட் என்டர்டெயின்மென்ட் இன்க்  மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது  என்று புளோரிடாவின் வணிக மற்றும் நிபுணத்துவ ஒழுங்குமுறை துறையின் செயலாளர் ஹால்சி பெஷியர்ஸ் புளோரிடாவின் ஆரஞ்சு கவுண்டியில் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.


டிஸ்னி பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும்போது, ​​விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் வெப்பநிலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் முகமூடிகளை அணிய அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிகிறது. இந்த ரிசார்டில்  அணிவகுப்பு, வாணவேடிக்கைகள்  மற்றும் சமூக கூட்டத்தை உருவாக்கும் பிற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கபட்டுள்ளது .


டிஸ்னி நிறுவனம் தொடர்பு இல்லாத கட்டண முறைகளை ஊக்குவிக்கும் மற்றும் உணவகங்களில் தற்போது பின்பற்றி  வரும்  மொபைல் ஆர்டர் முறைகளை விரிவுபடுத்தும் என்று தெரிவித்துள்ளது. விருந்தினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இது திட்டமிட்டுள்ளது, அதாவது அவர்கள் தங்கள் பூங்கா பாஸ்களை நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.


ஜனவரி மாத தொடக்கத்தில்  கொரோனா வைரஸ் நாவலின் பரவலைக் கட்டுப்படுத்த, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, உலகம் முழுவதும் உள்ள அதன் தீம் பூங்காக்களை மூடியது. இதன் காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரை அதன் தீம் பார்க் பிரிவில் 1 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது எனவும் அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.


மொழியாக்கம் : நேசமணி விக்னேஸ்வரன்