நீங்கள் அதிகம் யோசிப்பவரா ? ‘இதை’ செய்யுங்கள் உங்கள் மனம் மாறும்!
நம்மில் பலர் அதிகமாக யோசிப்போம். இதனால், நம் மனதில் தேவையில்லாத சோகங்கள் பல குடி கொண்டு விடும்.
அதிகம் யோசிப்பதை ஆங்கிலத்தில் Overthinking என்ற பெயர் உள்ளது. முன்னால் நடந்ததை குறித்து யோசிப்பதும், இனி நடக்க இருப்பதை குறித்து யோசிப்பதும், நாம் நினைத்துக்கொண்டிருப்பது நடந்து விட்டால் என்ன நடக்கும் என்று யோசிப்பதும் இதில் அடங்கும். இதனால் பலருக்கு தேவையற்ற மன அழுத்தங்களும், மகிழ்ச்சியின்மையும் ஏற்படும்.
நம் மனமே நமக்கு எதிரியும் நண்பனும் கூட. நம் மனம், பல சமயங்களில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவி செய்யும். பல சமயங்களில் அதுவே நம்மை இதுவரை வராத பிரச்சனைகளை வைத்து கலங்க வைக்கும். அதிகமாக யோசிப்பதால், மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை உருவாக்கும். இதனை தவிர்க்க ஜப்பானிய ட்ரிக்ஸ் சில இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
ஷோகனாய்:
Shoganai என்தற்கு அர்த்தம், ‘அது உதவ முடியாது’ என்று அர்த்தம். நமது கட்டுப்பாட்டை மீறி ஒரு விஷயம் நடக்கிறது என்றால், அதைப்பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட வேண்டும். அதனால், இன்னும் நடைபெறாத ஒரு விஷயத்தை நினைத்து, அதனால் என்ன நடக்குமோ என்று கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும். ‘என்ன நடக்குமோ’ என்று யோசிப்பதை விட்டுவிட்டு, ‘தற்போது என்ன நடக்கிறது..’ என்பதில் கவனம் செலுத்துங்கள். இதனால், எப்போதும் தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஷிரின்-யோகு:
இயற்கையோடு உங்களை நீங்களே இணைத்துக்கொள்வதற்கான முறையைத்தான் ஜப்பானிய மொழியில் ஷிரின் யோகு (Shirin-yoku) என்பர். தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் செல்போன் உள்ளிட்ட சாதனங்களிடம் இருந்து தள்ளியிருப்பது நல்லது. மரங்கள், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இயற்கையான இடங்களில் அமைதியாக அமர வேண்டும். இது, உங்களின் மன நிலையை தூக்கி விடும். இது, உங்களை நிதானமாகவும் யோசிக்க தோன்றும். முடிந்தளவு, மரங்கள் நிறைந்த பூங்காவில் நடந்து பழகுங்கள். தூய்மையான காற்றை சுவாசித்தால் மனமும் எண்ணங்களும் கூட தூய்மையாக இருக்கும்.
நென்புடுசு:
இன்வார்த்தைகளை, அல்லது உங்களை அமைதிப்படுத்தும் ஏதேனும் வார்த்தைகளை உபயோகிப்பதற்கு பெயர் நென்புடுசு (Nenbutsu). இது, நீங்கள் அதிகம் யோசிப்பதை தடுத்து நிறுத்த உதவும். பிற எண்ணங்களால் நீங்கள் அடித்து செல்லப்படாமலும் இது தடுக்கிறது. இது, உங்கள் மனதுக்கு மன அமைதியை கொடுக்கும் மனதை நிலையாக வைத்திருக்க உதவும் ஒரு முறையாகும்.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்கள் போதும்!
சாசென்:
மனதை ஒருநிலைப்படுத்தி, தற்போதைய நிலையில் உங்கள் மனதை ஈடுபடுத்தும் முறைக்கு பெயர் சாசென் (Zazen). இந்த முறையில், உங்களை பற்றி நீங்கள் அதிகமாக புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில், உங்களுக்கு எந்த மாதிரியான நினைவுகள் வந்தாலும் அதனோடே இருக்கவும். இதனால், உங்களது தேவையற்ற கவலைகளை நீங்கள் விட்டொழிக்க முடியும்.
காமன்:
"Gaman" என்பது "சகிப்புத்தன்மை" அல்லது "விடாமுயற்சி" என அர்த்தப்படும். இது சிரமங்களை துணிச்சலுடனும், உறுதியுடனும் எதிர்கொள்வதற்கு வழிவகுக்கும். தோற்கடிக்கப்பட வேண்டிய எதிரியாக அதிகமாக நினைப்பதை விட, அமைதியாகவும் உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக நாம் உணர முடியும். நம் மன வடிவங்களுக்கு அடிபணியாமல் அவற்றை ஒப்புக்கொள்வது, இறுதியில் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத போராட்டங்களுக்கு செல்ல உள் வலிமையை வளர்த்துக் கொள்ள உதவும்.
வபி-சபி:
ஜப்பானிய அழகியல் "வாபி-சபி" அபூரணம் மற்றும் நிலையற்ற தன்மையைக் எடுத்தியம்புகிறது. இந்த தத்துவம் நம் மனதில் விரிவடைந்து, அதிகப்படியான சிந்தனையுடன் தொடர்புடைய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் இயற்கையான எழுச்சியை தழுவுவதற்கு உதவும். நம்மில் இருக்கும் குறைகளை பாராட்டவும், நாம் நம் மீது கொடுத்துக்கொள்ளும் அழுத்தத்தை போக்கவும் வபி-சபி முறை உதவுகிறது.
மேலும் படிக்க | மலச்சிக்கலை தீர்க்க வேண்டுமா? ‘இந்த’ 5 பழங்களை சாப்பிடுங்கள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ