Best Fruits For Constipation: மலச்சிக்கலால் அவதிப்படுவோர், கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்களின் லிஸ்ட்.
பலருக்கு‘மலச்சிக்கல்’ என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்காக, மருத்துவமனையை பலர் நாடுகின்றனர். இதை தீர்க்க 5 பழங்களை சாப்பிடலாம்.
பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையாக இருக்கும். மூன்று நாட்களுக்கும் மேலாக குடல் இயக்கம் சரியாக இல்லையென்றால் மலச்சிக்கல் ஏற்படும். இருப்பினும், இது ஒருவருக்கொருவர் மாறும்.
சரியாக உடற்பயிற்சி இன்மை, சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். ஆனால், இதுவும் எளிதில் தீர்க்கக்கூடிய ஒரு விஷயம்தான். இதை தவிர்க்க சில பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?
பேரிக்காய்: பேரிக்காயில் 5.5 கிராம் ஃபைபர் சத்துக்கள் உள்ளது. ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 20% ஃபைபர் சத்துக்கள் தேவைப்படுகிறது. இதனால், தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டிராகன் பழங்கள்: டிராகன் பழத்தில், சிகப்பு மற்றும் மஞ்சள் தோள் படிந்தது என இரண்டு பழங்கள் உள்ளது. இந்த இரண்டு பழங்களிலுமே கருப்பு சீட்கள் இருக்கின்றன. இதில், 5 கிராம் ஃபைபர்கள் உள்ளது. இதனால், இப்பழத்தை ஜூஸ் ஆகவோ, அப்படியேவோ சாப்பிடலாம்.
ஆப்பிள்: ஆப்பிள் பழம், சாறாக குடிக்கவும் அப்படியே சாப்பிடவும் உகந்த பழமாகும். இதில், 4 கிராம் ஃபைபர் சத்து உள்ளது. ஆப்பிள் சாப்பிடுவதால் குடல் இயக்கம் சரியாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிட்ரஸ் பழங்கள்: திராட்சை பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்டவை சிட்ரஸ் பழங்கள் வகையில் அடங்கும். இந்த பழங்களிலும் 4 சதவிகித ஃபைபர் சத்துக்கள் உள்ளன. எனவே, இந்த பழங்களை சாப்பிட்டாலும் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
கிவி பழங்கள்: கிவி பழத்தில் 2 கிராம் ஃபைபர் உள்ளது. இது, வயிறு மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. சாலட் அல்லது முழு பழமாக இதை எடுத்துக்கொள்ளலாம். இதை ஸ்மூதியாகவும் குடிக்கலாம்.