மழைக் காலத்தில் அடிக்கடி வயிற்றுப்போக்கு வருகிறதா... இந்த 5 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்!
Monsoon Season: மழைக் காலத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அடிக்கடி பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க இந்த 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள்...
Essential Habits For Monsoon Season: வெயில் காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பருவமழை கடுமையாக பெய்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அதி கனமழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. தமிழ்நாட்டிலும் கூட நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பருவமழை பெய்வதால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகளிலும் நீர்வரத்து அதிகரிக்கிறது. விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் பருவமழை பெய்வதனால் பயன்பெறுகின்றன எனலாம். அதுவே, பருவமழையால் பாமர மக்களும், வியாபாரிகளும் கடும் சிரமத்தை சந்திக்கின்றன. சாலையில் வாகன ஓட்டிகள், பொது போக்குவரத்தில் பள்ளி - கல்லூரி - அலுவலகம் செல்லும் மக்கள் என பல்வேறு ரீதியில் மழையினால் மக்கள் சிரமப்படுவது ஒருபுறம் இருக்க உடல்நிலை ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்படுவதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
உணவே வினையாக மாறலாம்
கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு வெயில் தாக்கத்தினால் பல வகைகளில் எப்படி பாதிப்புகள் ஏற்படுமோ, அதேபோல் இந்த பருவமழை காலத்திலும் மக்களின் உடல்நிலை என்பது பாதிப்புக்கு உள்ளாகும். அதிலும் குறிப்பாக, இந்த பருவமழை காலத்தில் வயிற்றில் தொற்று உண்டாகும் வாய்ப்பு அதிகம் இருக்கும். அதாவது நீங்கள் உண்ணும் உணவே உங்கள் ஆரோக்கியத்திற்கு வினையாக அமையலாம்.
மேலும் படிக்க | ஆண்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் அறிகுறிகள் இவைதான்! அலட்சியம் வேண்டாம்!
உடலுக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் வழங்கி, அதனை சீராக இயங்க வைக்க உதவுவது உணவுதான். அதே உணவு விஷமாகி உங்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டை ஏற்படுத்தும் வாய்ப்பு இந்த பருவமழை காலத்தில் அதிகம் இருக்கும். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பேக்டீரியா மற்றும் மற்றும் பிற கிருமிகள் எளிமையாக பரவும். இது நீங்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவை பாழாக்கும். அதை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படலாம்.
இந்த 5 பழக்கங்கள் முக்கியம்
இதன்மூலம், கெட்டுப்போன உணவை சாப்பிடுவதால் நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். அதுமட்டுமின்றி உங்களின் வயிற்றிலும் தொற்று உண்டாகும். ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் வயிறு வலி, அலர்ஜி, வயிற்றுப் போக்கு, வீக்கம், குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரியும். எனவே, மழைக் காலத்தில் இதுபோன்ற உணவு சார்ந்த நோய்களில் இருந்து தப்பிக்க சில பழக்கவழக்கங்களை பின்பற்றினால் போதும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
பால் பொருட்களில் கவனம்: நீங்கள் பால், தயிர், வெண்ணை போன்ற பால் சார்ந்த பொருள்கள் எப்போது காலாவதி ஆகிறது என்பதை கவனத்திள் கொள்ள வேண்டும். நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்தாலும் சரி, ஃபிரீசரில் வைத்தாலும் சரி அந்த தேதியை கவனத்தில் வைக்கவும். பதப்படுத்தப்பட்ட பாலில் பேக்டீரியா தாக்கும் ரிஸ்க் மிக குறைவுதான்.
சுடச்சுட சாப்பிடுங்கள்: முந்தைய நாள் உணவை சாப்பிடவதை விட சமைத்த உடனே அந்த உணவை சாப்பிட்டால் அது உங்களுக்கு நம்மை பயக்கும். அதில் கிருமி தாக்கம் இருக்காது. மேலும் சாலையோரம் விற்கப்படும் உணவுகளை தவிர்க்கவும்.
பிரிட்ஜில் வையுங்கள்: சமைத்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து, பின்னர் தேவைப்படும்போது முறையாக சூடு செய்து சாப்பிடவும். ஃபிரிட்ஜையும் தூய்மையாக வைத்திருக்கவும். நீங்கள் ஃபிரிட்ஜில் சமைத்த உணவை வைக்காமல் விட்டுவிட்டால் அது கெட்டுவிடும். எனவே, சமைத்த உணவுகளையும் சரி, காய்கறிகளையும் சரி ஃபிரிட்ஜில் வைக்கவும்.
சமைக்கும் முன் கழுவவும்: எப்போது சமைப்பதாக இருந்தாலும் அதன் அடிப்படையான விஷயம் உணவு பொருள்களை முறையாக கழுவியிருக்க வேண்டும். காய்கறிகள், அரிசி, பருப்பு உள்பட அனைத்தையும் சுத்தமான நீரில் கழுவவும். அதில் இருக்கும் தூசிகளும், கிருமிகளும் அப்போதுதான் நீங்கும்.
கைகளை சுத்தமாக வைக்கவும்: மழைக்காலத்தில் கிருமிகள் அதிகம் பரவும் என்பதால் உங்களின் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் குளியுங்கள்.
மேலும் படிக்க | Face Wash Tips: ஒரு நாளுக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ