ஆண்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் அறிகுறிகள் இவைதான்! அலட்சியம் வேண்டாம்!

High Cholesterol in Men: உடலில் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு ஏற்படும் போது தோல் அலர்ஜி, இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சில பொதுவான அறிகுறிகளை அலட்சியமாக விட கூடாது.

Written by - RK Spark | Last Updated : Jul 20, 2024, 06:43 AM IST
  • அதிக கொலஸ்ட்ரால் தலைசுற்றலை ஏற்படுத்தலாம்.
  • கால்களில் வலி, மறத்து போகும் தன்மையை ஏற்படும்.
  • ஒவ்வொன்றிற்கும் உடனடியாக மருத்துவ உதவி தேவை.
ஆண்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் அறிகுறிகள் இவைதான்! அலட்சியம் வேண்டாம்! title=

High Cholesterol: உடல் எடை அதிகரித்தால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு முதல் இதயம் தொடர்பான நோய்கள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக கொழுப்பு சேர்வது முக்கியமான உடல்நல பிரச்சினையாகும். இவை உடலை உள்ளே இருந்து பாதிப்படைய செய்கின்றன. இதன் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. அதிக கொழுப்பு சேரும் போது கொலஸ்ட்ரால் ஏற்பட்டு தமனிகளில் பிளேக் கட்டமைக்கப்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன. ஒன்று கெட்ட கொலஸ்ட்ரால், மற்றொன்று நல்ல கொலஸ்ட்ரால். எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளில் படிந்து அதிகப்படியான கொழுப்பு மற்றும் மெழுகு படிவுகளை உடலில் உருவாக்கலாம். ஒருசில சமயங்களில் எல்டிஎல் அளவு அதிகரித்தால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படலாம். எனவே உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேரும் போது ஏற்படும் சில அறிகுறிகள் அலட்சியாக விட கூடாது.

மேலும் படிக்க | ஆடி மாசம் வந்தாச்சு..கூழ் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள்

சாந்தெலஸ்மா

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் கண்ணுக்கு அருகில் சாந்தெலஸ்மா அறிகுகள் ஏற்படும். இது அதிகப்படியான எல்டிஎல் அளவை குறிக்கும் பொதுவான ஒரு அறிகுறியாகும். இவை கண்களை சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் மஞ்சள் நிறத்தில் ஏற்படும்.

நெஞ்சில் அதிக வலி

உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்தால் தோல் அழற்சி அல்லது தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. தமனிகளில் அதிகமாக கொழுப்பு படிவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிக கொழுப்பு படியும் போது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். இது மார்பு வலி அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் உடலுக்கு அதிக வேலை கொடுக்கும் போது, மன அழுத்தமாக இருக்கும் போது இந்த பிரச்சனைகள் வரலாம்.

உடலில் உணர்வின்மை

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் தமனி நோய்க்கு வழிவகுக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த ஓட்டம் குறைத்தால் உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நடக்கும் போது கால்கள், பாதங்கள் பலவீனமாக இருக்கும்.

அதிக மூச்சு திணறல்

உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து இருந்தால் அவை தமனி நோய், இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிக கொழுப்பு இரத்தத்தை பம்ப் செய்யும், இதயத்தின் திறனை பாதிக்கிறது. எனவே சிறிதாக எந்த ஒரு வேலை செய்தாலும் அதிக மூச்சு திணறலை ஏற்படுத்தும். நடக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது கூட மூச்சு திணறல் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News