Japanese Techniques To Stop Laziness : சோம்பேறித்தனம் என்பது, ஒருவர் வாழ்க்கையில் பெரிய தோல்வியை ஏற்படுத்தும் பழக்கமாகும். இதை, நினைத்தவுடன் ஒரே நாளில் எல்லாம் மாற்றிவிட முடியாது. இதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. இதனை பின்றபற்றும் சிலர் ஆக்டிவாக வாழ்ந்து சாதிக்கின்றனர். அப்படி, உலகளவில் மிகவும் ஆக்டிவான வாழ்க்கை முறையை கொண்ட நாடு, ஜப்பான். இங்கிருப்பவர்கள் தங்களது வாழ்வை சில விதிமுறைகளின் படியும், சில தத்துவங்களின் படியும் வாழ்கின்றனர். இதனாலேயே அவர்களால் பொருளாதாரம், டெக்னாலஜி, மருத்துவம் என பலவித துறைகளில் முன்னோடியாக இருக்க முடிகிறது. அப்படி, அவர்களை நாமும் பின்பற்றினால் சோம்பேறித்தனத்தை ஒழித்துக்கட்டலாம். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம், வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.தினசரி முன்னேற்றம்:


இந்த முறைக்கு ஜப்பானிய மொழியில் Kaizen என்று பெயர். இதனை இவர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் உபயோகிக்கின்றனர். ஒரே நாளில் அல்லது சில நாட்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, சின்ன சின்ன முன்னேற்றங்களை தினமும் வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\


உதாரணம்:


உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய கடினமாக அல்லது சோம்பேறித்தனமாக இருக்கிறது என்றால், முதலில் 5 நிமிடம் வாக்கிங் செய்து பழகிக்கொள்ளுங்கள்.


அதிகம் படிக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு ஒரு பக்கம் படித்து ஆரம்பியுங்கள்.


இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை பெரிய இடத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். 


2.இக்கிகை:


புத்தகமாக வெளியானதாலோ என்னவோ, இது ஜப்பானியர்களின் மிகவும் பிரபலமான தத்துவமாக கருதப்படுகிறது. இதற்கு “வாழ்வில் அர்த்தம்” என்று பொருளாகும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும், அர்த்தத்துடன் இருந்தால் வாழ்வே அர்த்தமுள்ளதாக மாறிவிடும் என்பதுதான் அந்த தத்துவம்.


உதாரணம்:


உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது, எது உங்களை உணர்வு பூர்வமாக வைத்துக்கொள்கிறது என பார்க்க வேண்டும்.


உங்கள் திறன் மற்றும் தகுதிகளுக்கு ஏற்றவாறான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.


உங்களை உபயோகமாக உணர வைக்கும், மனதார திருப்தி பட வைக்கும் விஷயங்களை செய்ய வேண்டும். அது உங்கள் வேலை, பொழுதுபோக்கு அம்சம் எதுவாக இருந்தாலும் சரி.


நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கு பின்னரும், “நாம் ஏன் இதை செய்கிறோம்?” என்ற கேள்வி, உங்களுக்குள் எழுந்துகொண்டே இருக்க வேண்டும்.


3.சரியான நேரம்:


சோம்பேறிகளாக இருப்பவர்கள் பெரும்பாலு ஒரு வேலையை செய்யக்கூடிய திறன் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சரியான நேரத்திற்காக காத்திருந்து காத்திருந்தே அவர்கள் சோம்பேறிகளாகவும் மாறி விடுகின்றனர். இதை சரிசெய்ய ஜப்பானியர்கள் வைத்திருக்கும் முறைதான், Wabi-Sabi. இது, வாழ்வில் இருக்கும் குறைகளை புரிய வைப்பதோடு, அனைத்தும் கச்சிதமாக இருந்து விட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதையும் புரிய வைக்கிறது.


என்ன செய்ய வேண்டும்?


சரியான நேரத்திற்காக காத்திருக்காமல் எதையும் ஆரம்பிக்க வேண்டும்.


பழைய தவறுகளை ஏற்றுக்கொண்டு அதை பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேற தயாராக வேண்டும்.


முடிவு என்னவாகும் என யோசிப்பதை விட்டுவிட்டு, செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்.


4.உணவு:


நம் ஊரில் கூட பெரியவர்கள் “வயிறு நிறைய சாப்பிடக்கூடாது” என்பார்கள். இதனை, ஜப்பானியர்களும் கடைப்பிடிக்கின்றனர். அதாவது, இவர்கள் வயிறு 80% உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வார்களாம். இதற்கு Hara Hachi Bu என்று பெயர். இது, சரியான உணவு பழக்கம் என்பதை தாண்டி, சுய ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதோடு, மனதை அலைபாய விடாமலும் தடுக்கிறது.


எப்படி செய்ய வேண்டும்?


கவனத்தை சிதற வைக்கும் சமூக வலைதளங்கள், துரித உணவுகள், அதிக நேரம் டிவி பார்த்தல் ஆகிய விஷயங்களில் இருந்து தள்ளியிருக்க வேண்டும்.


சாப்பிட்டாலும், வேலை செய்தாலும், ஷாப்பிங் செய்தாலும் என்ன செய்கிறீர்களோ, அதனை முழு மனதுடன் செய்ய வேண்டும்.


எதையும் அதிகமாக செய்யும் போது கவனம் இருக்க வேண்டும். சுய கட்டுப்பாடு மற்றும் சமநிலையை கையாள வேண்டும்.


மேலும் படிக்க | வீண் செலவுகளை குறைக்க ஜப்பானியர்கள் செய்யும் ஒரே விஷயம்! என்ன தெரியுமா?


மேலும் படிக்க | என்ன சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத ஜப்பானியர்கள்! ‘இந்த’ 5 பழக்கங்கள் காரணம்..


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ