30 வயதுக்குள் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகங்கள்! சின்ன லிஸ்ட்தான்..

Books You Should Read Before Turning 30 : சில புத்தகங்களை, நாம் தாமதிக்காமல் இளமையாக இருக்கும் போதே படித்துவிட வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள் எவை தெரியுமா? 

Books You Should Read Before Turning 30 : புத்தகங்கள், நம்மை வேறு உலகிற்கே அழைத்து செல்லும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன. அது, ஒரு நாவலாக இருந்தாலும் சரி, தத்துவ மேதையின் புத்தகமாக இருந்தாலும் சரி, எதுவாக இருப்பினும் நாம் அதில் மூழ்கிவிட்டால், சுற்றி இருக்கும் எதுவுமே நம் உலகில் இல்லாதது போலவே இருக்கும். உங்களுக்கு 30 வயது ஆவதற்கு முன்பு, சில புத்தகங்களை படித்துவிட வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?

1 /8

ஹார்பர் லீ எழுதிய புத்தகங்களுள் ஒன்று, To Kill A Mocking Bird. இந்த புத்தகம், 1960ஆம் ஆண்டு வெளியானது. மாக்கிங் பர்ட் என்ற பறவை போல, நாம் வாழ்வை வாழும் போது அழகாக அதை அனுபவித்து ரசிக்க வேண்டுமே தவிர, நாம் நினைக்கும் வழியில் செல்லவில்லை என்றால் அதை பழிக்க கூடாது என்பதை இப்புத்தகம் கூறுகிறது. 

2 /8

தி மிட்நைட் லைப்ரரி: மேட் ஹாக் எழுதிய புத்தகம், மிட்நைட் லைப்ரரி. நமக்குள் பல நிறை-குறைகள் இருக்கும். அதை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்பது இக்கதை சொல்ல வரும் கூற்றாகும். 

3 /8

The Happiness Project:  கிரெட்சன் ரூபின் எழுதிய புத்தகங்களுள் ஒன்று தி ஹேப்பினஸ் ப்ராஜெக்ட். இந்த புத்தக்த்தில் நாம் தினசரி செய்யும் சிறு விஷயங்கள் கூட, வாழ்க்கையை பெறிய அளவில் மாற்றும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

4 /8

One Star Romance : ஒன் ஸ்டார் புக் புத்ஹ்டகத்தை லாரா ஹேன்கின் எழுதியிருக்கிறார். இது, இளம் வயதினர் அனுபவித்து படிக்க கூடிய நல்ல காதல் புத்தகமாக இருக்கிறது. 

5 /8

ஆலிவ்: ஆலிவ் புத்தகத்தை எமா கானோன் என்பவர் எழுதியிருக்கிறார். குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க இந்த புத்தகம் வழிவகுக்கும். சொல்ல வருவதை இதில் காமெடியாகவும் கூறியிருக்கின்றனர். 

6 /8

I Decided to Live as Me: இந்த புத்தகத்தை, கிம் ஷாயூன் எழுதியிருக்கிறார். பிறருக்காக அன்றி, நமக்காக எப்படி வாழ்வது என்பதை இந்த புத்தகம் கற்றுக்கொடுக்கும். 

7 /8

ஹேப்பி ப்ளேஸ்: எமிலி ஹென்றி எழுதியிருக்கும் புத்தகம், ஹேப்பி ப்லேஸ். இந்த புத்தகம், பல தம்பதிகளால் கொண்டாடப்படும் புத்தகமாக இருக்கிறது. 

8 /8

பிக் மேஜிக்: இந்த புத்தகத்தை எலிசபெத் கில்பர்ட் எழுதியிருக்கிறார். வாழ்வில் வெற்றி பெற, தினமும் என்ன செய்ய வேண்டும், என்னென்ன பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.