வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்
நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 அல்லது அதற்கு மேல் என்ற அளவில் உயர்ந்துள்ளது. டீசலின் விலையும் அதிகரித்து வருகிறது.
நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 அல்லது அதற்கு மேல் என்ற அளவில் உயர்ந்துள்ளது. டீசலின் விலையும் அதிகரித்து வருகிறது.
பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் லடாக் ஆகிய இடங்களில் பெட்ரோல் (Petrol) ரூ.100 தாண்டியுள்ளது மற்ற மாநிலங்களிலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 என்ற அளவுக்கு மிக அருகில் உள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்க முடிந்தால், அதனால், பெருமளவு பணம் மிச்சமாகும். இங்கே கூறியுள்ளவற்றை பின்பற்றினால் உங்கள் காரின் மைலேஜை 20 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
கார் பம்பர் கிரேஷ் கார்டு
பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்றோ, பேஷன் காரணமாகவோ அல்லது விபத்து ஏற்பட்டால், பமபருக்கு ஒன்றும் ஆகக் கூடாது என இதை பொருத்துவதால், காரின் மைலேஜ் குறைகிறது. காரில் கனரக வகையிலான பம்பர் க்ரேஷ கார்ட் நிறுவுவதன் மூலம், ஏர் பையைத் திறக்காதது உட்பட பல வகையான சிக்கல்கள் உள்ளன. இது தவிர, காரின் மைலேஜும் கணிசமாகக் குறைகிறது. மேலும், விபத்து ஏற்பட்டால், காரின் ஏர்பேக்குகள் வேலை செய்யவில்லை என்றால் அதுவும் மிகவும் ஆபத்து.
ALSO READ | Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!
பேஷனான, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டயர்கள்
கார் நிறுவனத்தின் பொருத்தப்பட்ட டயர்களை மாற்றுவதோடு, தங்கள் காரில் பேஷனான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அகலமான டயர்களை பொருத்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. இது காரின் கிரிப்பை அதிகரிக்கிறது, என்றாலும் காரின் இயந்திரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக காரின் மைலேஜ் தானாகக் குறையத் தொடங்குகிறது. பொதுவாக, கம்பெனியில் பொருத்தப்படும் டயர்கள், காருக்கு தேவையான சரியான அளவில் இருப்பதால், என்ஜினுக்கு மிகக் குறைந்த அழுத்தத்தை அளிக்கின்றன, இதன் காரணமாக மைலேஜ் பாதிக்கப்படுவதில்லை.
ஸ்பாய்லர்
நீங்கள் வழக்கமாக ஸ்பாய்லர்களை ஸ்போர்ட்ஸ் கார்களில் காணலாம். அதிக வேகத்தில் நகரும்போது கூட சமநிலையை இழக்காமல் இருப்பதற்காக பொருத்தப்படுகிறது. சாதாரண கார்களில் ஒரு ஸ்பாய்லரைப் பயன்படுத்தினால், அது காரின் ஏரோடைனமிக் வடிவமைப்பை பாதிக்கிறது, இதன் காரணமாக காரின் எஞ்சினுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, காரின் மைலேஜ் குறைகிறது.
Also Read | Ola, Yamaha, Suzuki: அட்டகாசமான Electric scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன, வாங்க தயாரா?
கனமான கூரை ரெயிலிங்குகள்
எஸ்யூவி வாகனங்களின் கூரை பகுதியில் சாமான்களை வைப்பதற்கு ஏதுவாக, கனமாக ரெயிலிங் பொருத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம். நெடுந்தூரம் பயணம் செய்யும் போது லக்கேஜ்களை வைக்க இது பொருத்தப்படுகிறது. ஆனால், பலர் இப்போது சந்தையில் இருந்து வாங்கும் சாமன்களை வைக்க என, தங்களது சிறிய கார்களில் அவற்றை நிறுவத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவை என்ஜினுக்கு அழுத்தம் கொடுக்கின்றன, இது மைலேஜை கணிசமாகக் குறைக்கிறது.
ALSO READ | Audi e-tron Launch: எலக்ட்ரிக் காரில், டெஸ்லாவை முந்துகிறதா AUDI..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR