Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!

ஓலா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளின் படங்களை தன் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2021, 01:38 PM IST
  • Ola Future Factory என்றழைக்கப்படும் ஓலா தொழிற்சாலை ரூ .2,400 க்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
  • இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வருகிறது.
  • ஓலா இ-ஸ்கூட்டர் 100-150 கிமீ வரம்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!! title=

Ola E Scooter: ஓலா எலக்ட்ரிக்கின் மின்சார ஸ்கூட்டர் சமீப காலங்களில் மின்சார வாகன சந்தையில் அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஸ்கூட்டராக இருக்கிறது. 

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) ஏற்கனவே நாடு முழுவதும் ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில், ஓலா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளின் படங்களையும் தன் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில், அகர்வால், தொழிற்சாலை கட்டுமானத்தின் முதல் கட்டம் முடிவடைந்ததாக அறிவித்தார்.  உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன (Two Wheelers) தொழிற்சாலையாக அமைக்கப்படும் இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வருகிறது. 

ALSO READ: Tata Motors: 10 எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா மோட்டர்ஸ் திட்டம் 

500 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள இந்த தொழிற்சாலையில், பேட்டரி, வெல்டிங், அசெம்ப்ளி, வண்ணப்பூச்சு முதல் சோதனை ஓட்டம் வரை அனைத்து பணிகளும் நடக்கும். 

“வெறும் 4 மாதங்களில், பல ஏக்கர் வெற்று பாறையாக இருந்த இந்த இடம் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையாக மாறியுள்ளது. ஓலா தொழிற்சாலையின் முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டு வெளிவரத் தொடங்கும். அணி சிறந்த பணியை செய்துள்ளது!!" என்று அகர்வால் ட்வீட் செய்துள்ளார்.

Ola Future Factory என்றழைக்கப்படும் இந்த தொழிற்சாலை ரூ .2,400 க்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தொழிற்சாலை இயங்கத் துவங்கியவுடன் சுமார் 2,000 பேருக்கும், முழு இயக்கத்துக்கு வந்தவுடன் சுமார் 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகர்வால் வரவிருக்கும் ஓலா இ-ஸ்கூட்டரின் படங்களையும் பகிர்ந்து வருகிறார். வரும் வாரங்களில் விரைவில் நடக்கவுள்ள ஸ்கூட்டரின் அறிமுகம், விலை ஆகியவை பற்றி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஓலா தலைமை நிர்வாக அதிகாரி, ஓலா ஸ்கூட்டரின் வண்ணம் குறித்தும் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். எந்த வண்ணத்தில் ஓலா ஸ்கூட்டரை காண ஆவலாக இருக்கிறீர்கள் என அவர் வாடிக்கையாளர்களிடம் கேட்டிருந்தார்.

ஓலாவின் இ-ஸ்கூட்டர் (Ola e-Scooter)2018 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் சார்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் OEM, Etergo BV ஆல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Etergo AppScooter ஐ அடிப்படையாகக் கொண்டது. ஓலா இ-ஸ்கூட்டர் 100-150 கிமீ வரம்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீக்கக்கூடிய பேட்டரி பேக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ் மற்றும் கிளவுட் இணைப்பு போன்ற அம்சங்களையும் இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும்.

ALSO READ:Ola, Yamaha, Suzuki: அட்டகாசமான Electric scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன, வாங்க தயாரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News