சம்பளத்தை சேமிக்கவே முடியவில்லையா? மாதாமாதம் கணிசமாக சேவிங்ஸ் செய்ய டிப்ஸ் இதோ!
Savings Tips: உங்கள் வருமானத்தில் இருந்து செலவுகளை குறைத்து எப்படி சேமிப்பது என நீங்கள் குழப்பமாக இருக்கிறீர்களா... உங்களுக்கான பதில் இதில் இருக்கிறது.
Savings Tips In Tamil: உலகம் முழுவதும் பொருளாதாரம் என்பது சற்று ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது. பங்குச்சந்தைகளும் சற்று தடுமாற்றத்துடன்தான் இருக்கின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கம், பணவீக்கம் என பெரும் பொருளாதார மந்தநிலையை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.
இது பணக்காரர்கள், வியாபாரிகளை மட்டுமே பாதிக்கும் என நீங்கள் நினைக்க வேண்டாம். ஏழை எளிய மக்களில் ஆரம்பித்து மாதம் சம்பளம் வாங்குவோர், மிடில் கிளாஸ் மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதிப்புகள் இருக்கும். இருப்பினும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான தீர்வையும் பொருளாதார வல்லுநர்கள் தருகின்றனர். அது வேறொன்றுமில்லை, நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால் வருமானத்தில் 10 சதவீதத்தை சேமிப்பது அவசியம் என்கின்றனர்.
சேமிப்பு முக்கியம்
அந்த 10 சதவீதத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சேமிக்கலாம். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம், நீண்ட கால சேமிப்பாக மியூச்சுவல் ஃபண்டில் போடலாம், வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். இவற்றை பொருளாதார வல்லுநர்களை ஆலோசித்து நீங்கள் முடிவெடுக்க வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும் எப்படி வருமானத்தில் 10 சதவீதத்தை சேமிப்பது என்பது உங்களின் யோசனையாக இருந்தால், அதற்கு இங்கு கொடுக்கப்படும் விஷயங்களை சரியாக பின்பற்றினாலே உங்களின் வருமானத்தில் பெரிய தொகையை சேமிக்கலாம்.
மேலும் படிக்க | இப்போது தங்கம் வாங்கலாமா.... வேண்டாமா...? வல்லுநர்கள் கூறுவது அறிவுரை என்ன?
பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்
சேமிப்பதற்கான முக்கிய விஷயமே தேவையில்லாத செலவுகளை குறைப்பதுதான். உங்களுக்கு எது தேவையான செலவு, தேவையில்லா செலவு என வகைப்படுத்துவது கடினமாகும். அவரச செலவு வேறு. ஆனால், ஒரு மாதத்தில் நீங்கள் செய்த தேவையில்லாத செலவை பட்டியல் போட்டாலே உங்களுக்கு அந்த செலவை குறைப்பதற்கான வழி புரிந்துவிடும். அதற்கு நீங்கள் நிச்சயம் பட்ஜெட் போட்டு செலவை நிர்வகிக்க வேண்டும்.
அதாவது, சம்பளம் வரும் அன்று உங்கள் கையில் இருக்கும் மொத்த தொகையை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உடனடி செலவு முதல் வரும் நாட்களில் இருக்கும் செலவுகள் அனைத்தையும் தோராயமாக கணக்கிட்டு குறித்துவைத்துக்கொள்ளுங்கள். மறக்காமல் அந்த தோராயமான அளவு அதிகபட்ச அளவாக இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் மளிகை ஜாமன் 2500 ரூபாய் வரும் என நினைத்தால் 3000 ரூபாய் என்று கூட குறித்துவைத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த 3000 ரூபாயை செலவு கடந்துவிடக் கூடாது என்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்யும்போது உங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
இந்த செலவுகளை கண்காணியுங்கள்
பட்ஜெட் போட்டாலே அதில் தேவையில்லாத செலவுகளும் உங்கள் கண்களுக்கு தெரிந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்வதும், ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதும் அதிகமாகிவிட்டன. இந்த சேவைகள் அனைத்து மதிப்புக் கூட்டப்பட்டவை என்பதால் செலவும் அதிகமாகும். எனவே, நீங்கள் வருமானத்தை சேமிக்க வேண்டும் நினைத்தால் இந்த செலவுகளை கட்டுப்படுத்துங்கள். தேவையின்றி ஆர்டர் செய்யாதீர்கள், உணவுகளை வீட்டிலோ அல்லது நேரடியாக ஹோட்டலுக்கு சென்றோ சாப்பிடுவது நல்லது.
மேலும் தேவையானவற்றை லிஸ்ட் போட்டு, அவற்றை மொத்தமாக வாங்குங்கள். மளிகை பொருள்கள், வீட்டுக்கு தேவையான பொருள்களை இப்படி வாங்குவதன் மூலம் அதில் கணிசமான தொகை மிச்சமாகும். கிரெடிட் கார்டுகளை தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்தாமல் அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதிலும் ஒரு தொகையை உங்களால் சேமிக்க முடியும். இத்தனை அநாவசிய செலவுகளை நீங்கள் குறைத்துக்கொண்டால் நிச்சயம் மாதம் வருமானத்தில் 10 சதவீதத்திற்கும் மேல் சேமிக்கலாம்.
மேலும் படிக்க | தபால் நிலையத்தின் தூள் திட்டம்: வட்டியிலேயே வண்டி வண்டியாய் வருமானம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ