உங்கள் வாழ்நாள் முழுவதும் பர்ஸ் நிரம்பி இருக்க வேண்டும் என விரும்பினால், இந்த விஷயங்களை பர்ஸில் மறந்தும் கூட வைக்க வேண்டாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் எல்லாரும் பர்ஸ் அல்லது வாலெட்டை வைத்திருப்போம். பல முறை மக்கள் தங்கள் பர்ஸில் பணம் தங்குவதே இல்லை என புலம்புவதை பார்க்கலாம். பர்ஸில் வைக்கும் பணம் நிமிடத்தில் மாயமாகி விடுகிறது. 


எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை கொடுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில், பர்ஸ் தொடர்பான விஷயங்களுக்கும் ஒரு தீர்வு உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலமும் உங்கள் பர்ஸ் எப்போதும் நிறைந்திருக்கும். சில பொருட்களை ஒரு போது பர்ஸில் வைக்கக் கூடாது. அதை மனதில் கொண்டால் உங்களால் பணத்தை சேமிக்க முடியும். 


ALSO READ | Vastu Tips: உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!

வாஸ்து சாஸ்திரத்தில், சாவியை ஒருபோதும் பர்ஸில் வைக்கக்கூடாது. என கூறப்படுகிறது. பணப்பையில் சாவியை வைத்தால் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


- எந்தவொரு காகிதம், அதாவது பில் போன்றவற்றை பணப்பையில் ஒருபோதும் வைத்திருக்க வேண்டாம். இது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகிறது.


- பணத்தை வாலெட் அல்லது பர்ஸில் வைத்திருக்கும்போது அவற்றை ஒருபோதும் மடித்து வைக்க வேண்டாம். பணத்தை எப்போதும் ஒழுங்காக அடுக்கி வைத்திருக்க வேண்டும்.


- முன்னோர்களின் படத்தை பணப்பையில் வைத்திருப்பது நல்லது இல்லை. முன்னோர்களின் படத்தை பர்ஸில் வைத்திருப்பது, பணம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.


- ஒரு சிட்டிகை அரிசியை பர்ஸில் வைத்திருப்பது பணத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும், பணம் மிக வேகமாக செலவாகாமல் இருக்கும்.



- அன்னை மகாலட்சுமியின் படத்தை பணப்பையில் அல்லது பர்ஸில் வைத்திருப்பது, பணப் பற்றாக்குறை இல்லாமல், நிதி நெருக்கடியிலிருந்து விடுபடலாம்.


ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!