Amazon-னை அடுத்து Flipkart-ம் சலுகை விற்பனையை துவங்கியது!
அமேசானின் `Great indian Sale` சலுகை விற்பனையினை தொடர்ந்து, ப்லிப்கார்ட்டும் தனது `Republic Day Sale` விற்பனையினை துவங்கியுள்ளது!
அமேசானின் "Great indian Sale" சலுகை விற்பனையினை தொடர்ந்து, ப்லிப்கார்ட்டும் தனது "Republic Day Sale" விற்பனையினை துவங்கியுள்ளது!
அமேசான் அறிவித்துள்ள அதே தேதியில், ப்லிப்கார்ட்டும் தனது விற்பனையினை அறிவித்துள்ளது.
வரும் ஐன.,21 முதல் துவங்கி 24 ஆம் தேதி வரை அமேசானின் "Greate Indian Sale" விற்பனை துவங்குகிறது. அதே வேலையில் ப்லிப்கார்டின் "Republic Day Sale" வரும் ஜன., 21 துவங்கி 23 வரை நடைப்பெறுகிறது.
இந்த சலுகை விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள், முன்னனி நிறுவனங்களான ஆப்பில், ஒன்ப்லஸ, சாம்சங், பூமா, அடிடாஸ், வ்ராங்லர், டைட்டன், அமெரிக்கன் டூரிஸ்டர், வெரோ மோடோ, பிபிஎல், மைக்ரோ மேக்ஸ், லினோவோ, ஹெச் பி, பிலிப்ஸ், வெற்பூல், பஜாஜ், ப்ரிஸ்டீஜ், உஷா போன்றவற்றின் பொருட்களை சலுகை விலையில் பெறலாம் என ப்லிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விற்பனையில் City Bank வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அல்லது க்ரடிட் அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதன் மூலம் 10% வரையிலான கூடுதல் விலை குறைப்பினை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் 50% முதல் 80% வரையில் விற்பனை விலையில் சலுகை பெறுவர் எனவும் ப்லிப்கார்ட் அறிவித்துள்ளது.