Friendship Tips: சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல உறவுகளை வைத்துக்கொள்வதும், நல்ல நண்பர்களை வைத்துக்கொள்வதும் அவசியமாகும். மனிதர்கள் குழுவாக, ஒரு கூட்டமாக இயங்குவதால் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதிலும் குறிப்பாக நண்பர்கள் இருந்தால்தான் வாழ்க்கை சிறப்பாகவும், நீங்கள் வாழ்வில் சிறந்த அனுபவங்களையும் பெற முடியும். உங்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லையெனில் வாழ்வில் பெரும் தனிமையை உணர வேண்டிய நிலை வரும். உங்களின் வாழ்க்கையே முழுமை பெறாமல் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நண்பர்கள் உங்களின் கொண்டாட்டங்களில் மட்டும் பங்குகொள்பவர் என்றில்லை அவர் உங்களின் கஷ்டத்தையும் பகிர்ந்துகொள்பவர் ஆவார். நல்ல நண்பர்களை வைத்திருப்பது உங்களின் ஆளுமையையும் உயர்த்தும். அதாவது ஒரு நல்ல நண்பர் தன்னை மட்டும் வளர்த்துக்கொள்ளாமல், தன் உடனிருப்பவர்களையும் கூடவே வளர்ச்சியடைய வைப்பார். அதிலும் கல்லூரி காலத்திலேயே நீங்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வாழ்வின் அதிமுக்கிய கட்டமாகும். அந்த வகையில், நல்ல நண்பர்களை தேர்வு செய்யும்போது, அவர்களிடம் இந்த 5 பண்புகள் இருக்கிறதா என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி இந்த 5 பண்புகளை நீங்களும் கடைபிடிப்பதன் மூலம் ஒரு நல்ல நண்பராக நீங்களும் சிறந்த விளங்கலாம். 


5 முக்கிய பண்புகள்... இதோ!


1. கலகலப்பு


ஒரு நண்பருடன் இருந்தால் உங்களுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் கட்டுக்கடங்காத வகையில் இருக்க வேண்டும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தாலோ, கஷ்ட காலத்தில் இருந்தாலோ அதனை மறைக்கச் செய்து உங்களை கலகலப்பாக வைத்திருக்கிறாரா என யோசியுங்கள். கஷ்ட காலத்திலும் உங்கள் சிரிக்கவைப்பதன் மூலம் அவர் மனதிடமானவர் என்பதையும் புரிந்துகொள்ளலாம். எனவே, ஒரு நல்ல நண்பனுக்கு இந்த பண்பு மிக முக்கியமாகும். 


மேலும் படிக்க | அடிக்கடி பணம் கேட்கும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் நோ சொல்வது எப்படி?


2. நேர்மறை சிந்தனை


வாழ்வில் நேர்மறையான சிந்தனை கொண்ட நண்பரை வைத்துக்கொள்வது மிக மிக முக்கியம். அப்படியான நண்பர்கள் உங்களை சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை துரத்தியடித்துவிடுவார்கள். உங்கள் வாழ்க்கையையே பாஸிடிவ்வாக வைத்திருப்பார்கள். கடினமானச் சூழலிலும் துணிவாக நின்று அனைத்தையும் எதிர்கொள்ளும் பண்பை பெற்றிருப்பவர்கள் கிடைப்பது மிகவும் அரிதுதான். 


3. நம்பிக்கை


நட்பில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு நல்ல நண்பனை நீங்கள் கண்மூடித்தனமாக நம்புவீர்கள். யாரை நீங்கள் அப்படி நம்புகிறீர்களோ அவர்கள்தான் நல்ல நண்பர்கள். உங்களின் ரகசியங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். எந்த சூழலிலும் உங்களுடன் நிற்பார் என்ற நம்பிக்கையும், உங்கள் நம்பிக்கையை வாழ்நாளில் உடைக்காமாட்டார் என்ற அதீத நம்பிக்கையும் வந்துவிட்டால் அவர் உங்களின் சிறந்த நண்பன் எனலாம். 


4. நேர்மை


நேர்மை நண்பர்களிடத்தில் இருக்க வேண்டிய அடிப்படையான விஷயம். ஒரு நண்பன் தன்னிடம் பொய் சொல்லக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். அதாவது, நீங்கள் செய்யும் தவறை அப்படியே ஏற்காமல், தவறு என தெரியும்பட்சத்தில் அதை சுட்டிக்காட்டி உங்களை திருத்த முயற்சிக்க வேண்டும். உங்களை சிறந்த வகையில் விமர்சிப்பவரே உங்களின் சிறந்த நண்பராக இருக்க முடியும். இது உங்களின் சுய முன்னேற்றத்திற்கு உதவும். 


5. ஊக்கமளிப்பது


அனைவரும் தங்களின் வாழ்நாள்களில் பல்வேறு சவால்களை சந்தித்தே ஆக வேண்டும். அப்படியான சவாலான நேரத்தில்தான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களின் முக்கியத்துவம் என்பது அதிகரிக்கும். அந்த நண்பர்கள் உங்களை ஊக்குவித்து, எவ்வித சூழலிலும் உங்களைவிட்டு விலகாமல் துணை நிற்பார்கள். உங்களின் வெற்றியை கண்டு அவர் பொறாமை கொள்ள மாட்டார். மாறாக பெருமைப்படுவார். 


பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிட்ட அனைத்தம் பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிசெய்யவில்லை. 


மேலும் படிக்க | உடலுறவுக்குப் பிறகு தம்பதிகள் இந்த தவறுகளை செய்யக்கூடாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ