Forbes பணக்காரர்கள் பட்டியலில் ஜாக்மாவை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆசியாவில் ஜாக்மாவை தாண்டினார் முகேஷ் அம்பானி. ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொடர்ந்து 35 வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆசியாவில் ஜாக்மாவை தாண்டினார் முகேஷ் அம்பானி. ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொடர்ந்து 35 வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்கா, சீனாவை அடுத்து உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது.
Also Read | IPL 2021 RCB vs MI: ரசிகர்களுக்கு விராட் சொல்லும் Strong சேதி என்ன தெரியுமா?
அதாவது இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்துவிட்டது. அதாவது உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட 3வது நாடு இந்தியா என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு முன்பு சீனாவின் தொழிலதிபர் ஜாக் மா ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இப்போது அவரை முந்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி.
அமேசான் பங்குகளின் விலை உயர்வினால், அவரது நிகர மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலராகியிருக்கிறது. இது ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட 64 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Also Read | மாளா செல்வத்தை அளித்திடும் மகாலட்சுமி சக்கர ஸ்லோகம்!
இரண்டாவது இடத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் பிடித்துள்ளார். இவர் அதிக லாபம் ஈட்டியவர். எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இவருடைய சொத்து மதிப்பு ஒரு ஆண்டுக்கு முன்பு 126.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அவர் 31 வது இடத்தைப் பிடித்திருந்தபோது அவருடைய சொத்து மதிப்பு 24.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் ஆசியாவின் செல்வந்தராகவும் அம்பானி உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார். 84.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை அவர் மீண்டும் பிடித்துள்ளார்.
Also Read | Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR