காதலுக்கு கண் கிடையாது என்பது பழமொழி. ஆனால், திருமணம் என்று வந்துவிட்டால், சொத்து என்பதுதான் முக்கியமான இடையூறாக வந்துவிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், அதிர்ச்சி தரும் தகவலாக, முன்னாள் பிரதமர் ஒருவர் 53 வயது வித்தியாசம் கொண்ட 32 வயது பெண் எம்.பி.யுடன் அடையாள திருமணம் செய்து கொண்டார். 


உண்மையில் 85 வயது சில்வியோ பெர்லுஸ்கோனி, 32 வயது மார்டா ஃபஸினா (Marta Fassina) இருவரும் திருமணம் (Marriage) செய்ய விரும்புகிறார்கள். ஆனால் ரூ. 834 பில்லியன் சொத்துக்கள் பிரிந்துவிடும் என்று பயப்படும் முன்னாள் பிரதமரின் பிள்ளைகள், திருமணத்தை எதிர்க்கின்றனர்.


மேலும் படிக்க | மேட்ரிமோனி மூலம் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘காதல் மன்னன்’!


எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாத காதல், யாருடைய வற்புறுத்தலாலும் வருவதில்லை. இதயத்தில்  காதல் பூக்கள் எப்போது, ​​எங்கே, யாருக்கு பூக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.


முன்னாள் பிரதமர் 53 வயது குறைந்த பெண்ணை மணந்தார்!
தற்போது இத்தாலியிலும் இதுபோன்ற வயது வித்தியாசமில்லாத காதல் ஒன்று அரங்கேறியுள்ளது. 



(Photo Courtesy: mf9milan / instagram)


85 வயதான முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 32 வயது பெண்ணை மணந்தார். அந்த பெண் வேறு யாருமல்ல, இத்தாலியின் தற்போதைய எம்.பி.யான மார்டா ஃபசினாதான்.


குழந்தைகள் திருமணத்தில் மகிழ்ச்சியாக இல்லை
ஊடக அறிக்கைகளின்படி, பெர்லுஸ்கோனி உண்மையில் இன்னும் திருமணம் (Wedding) செய்து கொள்ளவில்லை, ஆனால் அடையாள திருமணத்தை (உருவாக்கி, காதலி ஃபாசினாவுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்.


மேலும் படிக்க | 24 வயது இளைஞனை திருமணம் செய்யும் 61 வயது பாட்டி


பெர்லுஸ்கோனியின் காதலுக்கும், கல்யாண முடிவுக்கும் அவரது ஐந்து குழந்தைகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதால்தான் அடையாளத் திருமணம் செய்துக் கொண்டாராம். 


பெர்லுஸ்கோனி திருமணம் செய்து கொண்டால், அவரது செல்வத்தில் பாதி, அதாவது சுமார் 417 பில்லியன் ரூபாய்கள் புது மனைவிக்கு சென்றுவிடும் என்பதால் தான் காதலுக்கு தடா போடுகிறார்கள் முன்னாள் பிரதமரின் பிள்ளைகள்
 
இது மார்டா ஃபாசினாவின் இரண்டாவது உறவு. அவர் முன்பு ஃபிரான்செஸ்கா பாஸ்கல் என்ற இளைஞருடன் காதல் உறவில் இருந்தார், ஆனால் பின்னர் அவரை விட 53 வயது மூத்த சில்வியோ பெர்லுஸ்கோனியுடன் காதல் கொண்டார்.


மேலும் படிக்க | ஒரே பெண்ணுடன் 3 மத முறைபடி திருமணம்! அசரவைத்த அரசு ஊழியர்


இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காதல் மன்னர். இளம் மாடல்களுடன் அதிக நெருக்கம் பாராட்டும் அவரது பெயர் அவ்வப்போது காதல் விவகாரத்தில் அடிபடும் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலியல் தொழிலாளி ஒருவருடன் இரவைக் கழிக்க ரூ.50 கோடி கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 


 மைனர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கும் 85 வயது காதல் மன்னர், மீண்டும் ஒரு இளம் பெண்ணுடன் உறவாடுவதற்கு அவரது பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.  


மேலும் படிக்க | ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்ட நபர்! வைரல் புகைப்படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR