Ind vs Pak: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்ட பிரபல பெண்கள் இவர்கள் தான். இந்திய மணப்பெண்களும் பாகிஸ்தான் வீரர்களின் விருப்பமாக இருக்கின்றனர்.

புதுடெல்லி: ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 தொடங்கவிருக்கிறது. அக்டோபர் 24 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும் உள்ள உறவுகளின் ஒன்று திருமண உறவு.  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பிரபல மனைவிகள்…

Also Read | கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கின் இரண்டாவது மனைவி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா

 

1 /5

சோயிப் மாலிக் 2010 ஆம் ஆண்டு இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை மணந்தார். இது விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான திருமணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புகழ்பெற்ற தம்பதியருக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகனும் உள்ளார்  

2 /5

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி மற்றும் இந்திய வானூர்தி பொறியாளர் ஷமியா ஆர்சூ ஆகியோர் துபாயில் திருமணம் செய்து கொண்டனர், இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஷாமியா ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

3 /5

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்பராஸ் அகமது 2015 ஆம் ஆண்டு சையதா குஷ்பக்தை மணந்தார். தற்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

4 /5

பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம், ஆகஸ்ட் 2019 இல் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷா பைசல் மசூதியில் பிரிட்டிஷ் பிறந்த மனைவி சானியா அஷ்ஃபக்கை மணந்தார். மார்ச் 2021 இல், சானியா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

5 /5

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் 2007 ஆம் ஆண்டு நாஜியா ஹபீஸை மணந்தார். சமூக ஊடகங்களில் நாஜியா மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார், அவரது கிரிக்கெட்டில் அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதை காட்டுகிறது.