முகத்தில் மங்கு விழுவது உங்கள் சருமத்தை கெடுப்பது மட்டுமின்றி, உங்கள் உண்மையான வயதை விட பல வருடங்கள் மூத்தவராகவும் தோற்றமளிக்கும். இந்த சிக்கலைத் தவிர்க்க, சில தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களுக்கும் ஆண்களுக்கும் சரும பிரச்சனைகள் வருவது சகஜம். வயதை அதிகரித்துக் காட்டுவதில் முகத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முகத்தின் பொலிவும், பளபளப்பும் வயதானவர்களையும் இளமையாக காட்டுவதுபோல, சருமத்தின் ஆரோக்கியக் குறைவு வயதான தோற்றத்தைத் தரும்.


முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன, அதைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் செய்யும் சில தவறுகள் முகச் சுருக்கங்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முகத்தில் பரு மற்றும் மங்கு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. 


மேலும் படிக்க | கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்


கடுமையான விளைவை ஏற்படுத்தும் தவறுகள்


அதிக வெப்பம் மற்றும் பிரகாசமான சூரிய ஒளி: அதிக வெப்பம் மற்றும் சுட்டெரிக்கும் சூரிய ஒளி தோல் மீது மிகவும் மோசமான விளைவைக் கொடுக்கும். அதிக வெயிலில் தொடர்ந்து இருப்பது தோலில் பாதிப்பை ஏற்படுத்தும்.


நேரடியாக வெயில் சருமத்தில் படும்போது, முகப்பரு பிரச்சனை ஏற்படும். இவை, வயது முதிர்ச்சியை கூட்டிக் காண்பிக்கும். இதைத் தவிர்க்க, முகம் உட்பட வெயில் படும் உடலின் பகுதிகளிலும் தோலில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவேண்டும். 


புகைபிடித்தல்: புகைபிடிக்கும் பழக்கம் சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பதால் சருமத்தில் பருக்கள் அதிக அளவில் ஏற்படுவது மட்டுமல்லாமல், சரும பிரச்சனைகள் குணமாகாமல் தடுக்கிறது. இதன் காரணமாக, ஒரு நபர் வயதானத் தோற்றம் விரைவில் ஏற்படுகிறது. 



தவறான அல்லது போலி அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல்: தோல் வகைக்கு ஏற்ப அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாதது, மலிவான மற்றும் தரம் குறைந்த அல்லது போலியான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை முகத்தில் மங்கு பிரச்சனையை உண்டாக்கிவிடும். எனவே அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவும்.


வாசனை திரவியம் பயன்பாடு: சிலர் செண்டுகளை தினசரி பயன்படுத்துகிறார்கள். அவை நேரடியாக உடலில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அவற்றில் உள்ள பல இரசாயனங்கள் சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே சருமத்தில் நேரடியாக வாசனை திரவியத்தை தெளிக்காதீர்கள்.


(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மருத்துவரின் ஆலோசனையே சிறந்தது)


மேலும் படிக்க | மெடபாலிஸத்திற்கும் எடை இழப்புக்கும் உள்ள தொடர்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR