சென்னை: அத்தி வரதரை தரிசிக்க வழக்கத்துக்கு மாறாக இரண்டு மடங்கு அதிக அளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உட்பட 4 பேர் பலி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர், இந்த முறை வெளிவந்து காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த 18 தினங்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஜூலை 1 ஆம் தேதி முதல் காட்சியளிக்க தொடங்கிய அத்தி வரதர், தொடர்ந்து 48 நாட்கள் அத்திவரதர் பொதுமக்களுக்கு காட்சியளிப்பார். 


40 ஆண்டுகள் கழித்து தான் திரும்ப காட்சி அளிப்பார் என்பதால் அத்திவரதரை தரிசிக்க மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு அலைபோல மக்கள் திரண்டுள்ளதால் கூட்டம் அதிகமானது. இந்தநாள் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுபடுத்த முயற்ச்சி செய்தனர். ஆனால் மக்கள் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த போதுமான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 


அத்தி வரதரை தரிசிக்க வழக்கத்துக்கு மாறாக இரண்டு மடங்கு அதிக அளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்ப்பட்டு  மயங்கி விழுந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.