தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone Idea) லிமிடெட் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் ப்ரீ-பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஜி 5 –க்கான (Zee 5) இலவச வருடாந்திர சப்ஸ்க்ரிப்ஷனை சந்தாவை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் படி, ரூ .355, ரூ .405, ரூ. 595, ரூ .795 மற்றும் ரூ .2,595 திட்டங்களுடன் இந்த வசதி கிடைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜுடன் OTT தளத்தின் இலவச மெம்பர்ஷிப்பை வழங்கத் தொடங்கியுள்ளன. Vi (வோடபோன் ஐடியா) அதன் 5 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியத்தின் இலவச சப்ஸ்க்ரிப்ஷன் சலுகையை கொண்டு வந்துள்ளது.


இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கப்படும். டேட்டா, காலிங் (அழைப்பு) மற்றும் செல்லுபடியாகும் தன்மை (validity) போன்ற பிற நன்மைகளும் இந்த திட்டங்களில் கிடைக்கின்றன.


ALSO READ: BSNL-ன் அதிரடி offer: Free-யாக செய்யலாம் mobile recharge!!


சலுகைகளின் பட்டியல்


ரூ .355 திட்டத்தில், 28 நாட்கள் செல்லுபடியாகும் 50 ஜிபி டேட்டா கிடைக்கும். இது ஒரு டேட்டா பேக் மட்டுமே, அதாவது இதில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் கிடைக்காது.


405 ரூபாய் திட்டத்தில், ZEE 5 சந்தாவுடன் 285 நாட்கள் செல்லுபடியாகும் 90 ஜிபி ப்ரீ-பெய்ட் திட்டமும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை தினமும் வழங்கப்படுகின்றன.


ரூ .599 திட்டத்தில், 56 நாட்கள் வரம்பற்ற வேலிடிட்டி, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்-சுடன் 2GB டேட்டா கிடைக்கும்.


ரூ .795 திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இது தவிர, ஆண்டுதோறும் 5 ஜி இலவச சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.


ரூ .2595 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  இதில், 2 ஜிபி தினசரி தரவு வரம்புடன் அன்லிமிடன் காலிங் வழங்கப்படுகிறது. இதத் தவிர இலவச 5 ஜி சப்ஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது.


சலுகையை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது?


மேலே குறிப்பிட்டுள்ள எந்த பேக்கிலிருந்தும் இதை ஆக்டிவேட் செய்யலாம்.


Zee 5 activation link-உடன் ஒரு கன்ஃபர்மேஷன் செய்தி உங்களுக்கு வரும். அந்த இணைப்பைக் கிளிக் செய்து சரிபார்ப்புக்காக உங்கள் MSISDN மற்றும் OTP ஐ உள்ளிடவும்.


இதற்குப் பிறகு, நீங்கள் Activate பட்டனைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் Zee5 மெம்பர்ஷிப் ஆக்டிவேட் செய்யப்படும்.


செயலி அல்லது வலைத்தளத்திற்கு உள்நுழைய Zee5 உங்களுக்கு பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லை (Password) அனுப்பும்.


ALSO READ: Tech trick: Whatsapp open செய்யாமலேயே யாரு online-ல இருக்காங்கனு பாக்க ஒரு trick..


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR