தினமும் காலையில் சேவல் கூவுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்..!
சேவல் ஒன்று தினமும் காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது!!
சேவல் ஒன்று தினமும் காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது!!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், பிரான்ஸ் நீதிமன்றம் சேவல் ஒன்று தினமும் காலையில் கூவுவதற்கான அனுமதியை வழங்கியுள்ள சம்பவம் வைரளாகி வருகிறது.
கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் சண்டையின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மோரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவல் வைத்திருக்கும் வீட்டின் அருகில் வசிக்கும் பிரொன், சேவலின் சத்தம் தங்களுக்கு தொந்தரவாக உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பிரான்ஸின் அட்லாண்டின் கடற்கரை பகுதியில் உள்ள ஒலெரான் எனும் தீவில் உள்ள ஒரு வீட்டில்தான் இந்த சேவல் உள்ளது. அந்த ஒலெரான் தீவு, பிரான்ஸில் உள்ள நகரவாசிகள் தங்கள் விடுமுறைக்காக வந்து தங்கும் இடமாக மாறியுள்ளது. மோரிஸ் தினமும் விடியற்காலையில் கூவுவது, தனக்கு தொந்தரவாக உள்ளது என சேவலின் உரிமையாளர்களிடம் ஜீன் லூயிஸ் பிரொன் தெரிவித்தார்.
"இந்த சேவல் அதிகாலை 4.30 மணிக்கு கூவத் தொடங்குகிறது. மேலும் அது காலை முழுவதும், மதிய வேளைகளிலும் கூவிக் கொண்டிருக்கிறது," என பிரொன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஃபெசெளவுக்கு 2017ஆம் ஆண்டு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம், மோரிஸுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததோடு, சேவலின் உரிமையாளருக்கு ஏற்படுத்திய துயருத்துக்கு பிரொன் 1,100 அமெரிக்க டாலர்கள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.