ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? பதில் இதோ!
Man and Woman Friendship : எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் பலருக்கு, ஒரு ஆணும் பெண்ணும் வெறும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.
Man and Woman Friendship : உலகில், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி உருவாகும் ஒரு உறவு, நட்பு. தாய்-தந்தை, சகோதர-சகோதரி உறவு ரத்த சம்பந்தத்தால் உறுவாகிறது, காதலன்-காதலி உறவு உருவாவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் என கூறப்படுகிறது, ஆனால், நட்பு எப்படி உறுவாகிறது? பள்ளி அல்லது கல்லூரியில் யார் அருகிலாவது உட்கார வேண்டுமே என்று யாரென்றே தெரியாத ஒருவர் அருகில் அமர்ந்திருப்போம். எப்போது பேச ஆரம்பித்தோம், எப்படி இவருடன் பழகினோம், இவருக்கும் நமக்கும் அப்படி என்னதான் ஒற்றுமை இருந்தது என்பதே தெரியாமல் ஒரு உறவு ஆரம்பிக்கும். அதுதான் நட்பு. இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பலரும் அவரவரது நண்பர்களுக்கு Friendship Band கட்டியும், வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த தருணத்தில், ஒரு ஆணும் பெண்ணும் எப்படி நண்பர்களாக மாறுகின்றனர் என்பதை பார்க்கலாமா?
ஆண்-பெண் நட்பு:
ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? முடியாதா? என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாகும். இதற்கு பெரும்பாலானோர் கொடுக்கும் பதில் என்ன தெரியுமா? முடியும் என்பதுதான். படங்களிலும், தொடர்களிலும் நாம் பல தருணங்களில் நண்பர்களாக மட்டும் இருப்பவர்கள் பின்பு காதலர்களாக மாறுவதையும் அந்த காதல் திருமணத்தில் முடிவதையும் பார்த்திருப்போம். ஆனால் பிரியமான தாேழி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்களில் இருவேறு பாலினத்தை சேர்ந்தவர்களும் வெறும் நண்பர்களாக மட்டும் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், படத்தில் இருப்பதை விட நிஜத்தில் பலர் நெருங்கிய நண்பர்காளவே இருக்கின்றனர்.
உலகளவில் பல மில்லியன் அளவில் ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வெவ்வேறு பாலினத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருக்கும் போது அவர்களுக்குள் உணர்வு ரீதியாக ஒற்றுமை இருக்கும் என்றும், இருவரும் ஒருவருக்கொருவர் சமூக மற்றும் உணர்வு ரீதியான தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றனராம். மேலும், இது குறித்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு தரவில், பெண்களுடன் நட்புறவு கொண்டிருக்கும் ஆண்களில், 65 சதவீதம் பேர் காதல் அல்லாத வெறும் நட்புறவை மட்டும் பேணுவதாக கூறப்படுகிறது.
ஆண்களின் பார்வை:
பெண்களுடன் நட்பு கொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள், தங்களின் பெண் தோழிகள் மீது ஈர்ப்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர், காதல் உறவு வேண்டும் என்பதற்காக தங்களுக்கு பிடித்த பெண்களிடமே அவர்கள் நட்பு பாராட்டுவதாக கூறப்படுகிறது. ஒரு சிலர், அந்த காதல் கிடைக்காது என தெரிந்தும், அவர்களிடம் நட்புடன் பழகுவதாக கூறப்படுகிறது.
பெண்களின் பார்வை:
பெரும்பாலான பெண்களால், தனக்கு ஒருவர் மீது ஈர்ப்பு இருக்கிறது என தெரிந்து விட்டால் அவர்களால் வெறும் நண்பர்களாக மட்டும் அந்த நபருடன் பழக இயலாது. தனக்கு இந்த நபர் மீது பிடித்தம் இருக்கிறது என்று தெரிந்து விட்டால் ஏதேனும் ஒரு வகையில், அதை அவர்களிடத்தில் தெரிய படுத்தி விடுவர். அப்படி, அந்த நபரிடம் அதை தெரிவிக்க முடியாத பட்சத்தில் அவர்கள் அந்த உறவை மேலும் வளர்த்து விடாமல் பேசாமல் விலகி கொள்வர் என கூறப்படுகிறது. ஆண்களை போல அல்லாமல், பெண்கள், தங்களின் ஆண் நண்பர்களை வெறும் நண்பர்களாக மட்டும் பார்க்கின்றனர். ஆனால், இதில் ஒரு சிலருக்கு தன் மீது ஆண் நண்பருக்கு ஈர்ப்பு இருக்கிறது என தெரிந்துமே அவர்களுடன் நட்புறவுடன் பழகி வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
மேலும் படிக்க | Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ