விநாயகர் சிலைகள் ஊர்வலம்! கோலாகலமாக நிறைவு! விவரம் உள்ளே!
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ம் தேதி முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. 10 நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு நேற்று விநாயகர் சிலைகள் மும்பையில் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ம் தேதி முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. 10 நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு நேற்று விநாயகர் சிலைகள் மும்பையில் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
ஏற்கனவே ஏராளமான மக்கள் 3, 5 மற்றும் 7-வது நாள் வழிபாட்டிற்கு பிறகு வீடு மற்றும் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை நீர்நிலைகளில் கரைத்தனர். இந்தநிலையில் பெரும்பாலான மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் நேற்று ஆனந்த சதுர்த்தி அன்று கரைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. விநாயகர் சிலைகளை பக்தர்கள் நீண்ட தூரம் ஊர்வலமாக கடற்கரை பகுதிக்குக் கொண்டு வந்தனர். பின்னர் சிலைகள் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வாத்தியங்களை இசைத்த வாறு கலந்துகொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மும்பையில் வைக்கப்பட் டிருந்த புகழ்பெற்ற லால்பஹுச்சா ராஜ கணபதி சிலை, நேற்று காலையே கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது மும்பை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.