Garuda Puranam: கருட புராணத்தின் படி இந்த செயல்கள் உங்களின் ஆயுளை பாதிக்கும்
கருட புராணம் எமலோகத்தின் வாசலில் எமதர்மருக்கும், தர்மனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைப் பற்றி விவாதிக்கிறது.
கருடபுராணம்: மகாபுராணமாகக் (Mahapurana) கருதப்படும் கருடபுராணத்தில் (Garuda Puranam) வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றி மிக முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இதில், நல்ல வாழ்வு, அமைதியான, எளிதான மரணம் பெறுவது முதல், இறந்த பிறகு ஆன்மாவின் நடத்தை வரை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நமது ஆயுட்காலத்தை குறைக்கக்கூடிய தவறான பழக்கங்கள் மற்றும் செயல்கள் பற்றி நமது பழங்கால வேதங்களிலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட புராணத்தில் (Garuda Puranam) மனிதர்கள் எப்படி தங்களின் ஆயுளைத் தாங்களே எப்படி குறைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ | இந்த ராசிகாரர்களுக்கு இன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
சத்திய யுகத்தில் 1,00,000 ஆண்டுகளாக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் கலியுகத்தில் எப்படி 100 ஆண்டுகளாக குறைந்தது என்பது பற்றியும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட புராணம் எமலோகத்தின் வாசலில் எமதர்மருக்கும், தர்மனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைப் பற்றி விவாதிக்கிறது.
குறிப்பிட்ட நாளில் உடலுறவு கொள்வது
கருட புராணம் குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளது. கிருஷ்ணா மற்றும் சுக்லா பக்ஷாவின் சதுர்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி, அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் உறவு வைத்துக்கொள்வது பாவத்தின் உச்சமாகும்.
பழைய இறைச்சியை உண்பது
பழைய இறைச்சியை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இது பல நோய்களின் தாயகமாகும். இத்தகைய பழுதடைந்த, அழுகிய இறைச்சியை உண்பது பாவத்தின் உச்சமாகும்.
இரவில் தயிர் சாப்பிடுவது
இரவில் தயிர் சாப்பிடுவது பல நோய்களை வரவழைக்கிறது. பொதுவாக மக்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிரம் புரியாது. அதேசமயம், இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் சளி கோளாறுகள் நீண்ட நாள் நோய்களைத் தரும்.
இருட்டில் தூங்குவது
இருளில் ஒருபோதும் தூங்கக்கூடாது. நீங்கள் படுக்கையில் படுத்த பிறகுதான் விளக்குகளை அணைக்க வேண்டும். உடைந்த கட்டிலில் படுப்பது மரணத்திற்கான அறிகுறியாகும்.
அழுக்கு கைகளுடன் எழுதுவது
கைகளை சுத்தம் செய்யாமல் படிப்பது, எழுதுவது அல்லது பாடம் நடத்துவது போன்றவை உங்களின் ஆயுளை குறைக்கும்.
ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR