இந்தியாவின் ‘இந்த’ மலையில் பேய்கள் குடியிருக்கிறதாம்..! எந்த இடம் தெரியுமா..?
கயாவில் உள்ள ஒரு மலையில் பேய்கள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது.
கயா என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது, போதி மரமும் புத்தர் கோவிலும்தான். ஆனால், இந்த இடத்தில் அதை தாண்டி பல சுவாரஸ்யமான மற்றும் பிரபலமான விஷயங்கள் உள்ளன. அப்படி கயாவில் உள்ள ஒரு அமானுஷ்யமான அதே சமய்த்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு இடம் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
கயாவில் உள்ள ராம்ஷில மலையில் இருந்து கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் ப்ரீட்ஷில என்ற மலை உள்ளது. இந்த மலையை கோக்ஷதம் என்று குறிப்பிடுவர். இங்கு, முன்னோருகளூக்கு முக்தி கிடைப்பதாக பலர் கருதுகின்றனர். இந்த மலைக்கு கீழ் ஒரு பிரம்ம குண்டம் உள்ளது. இதில் மக்கள் பலர் நாடு முழுவதில் இருந்தும் வந்து பிண்டா-தானம் செய்து வருகின்றனர்.
விபத்தில் மரணம் அடைந்தவர்கள், எதிர்பாராத விதமாக இறந்து போனவர்களை அகால மரணத்தால் மரணமடைந்தவர்கள் என்பார்கள். இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள், யோனிகளால் அபகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி அகால முறையில் மரணம் அடைந்தவர்களின் ஆவிகள் யோனிகளின் கைகளில் சிக்காமல் முக்தி அடைய வேண்டும் என்பதற்காக இந்த மலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதனால், மலைகளில் வாழும் ஆவிகள் முக்தி அடைவதாக இங்குள்ளோர் நம்புகின்றோர்.
மேலும் படிக்க | சென்னையில் பேய் உலாவுவதாக கூறப்படும் இடங்கள்..இங்கு செல்கையில் உஷாராக இருக்கவும்..!
இந்த புதி ஷிலா மலையை பேய் மலை என்றும் அழைக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த மலையில் பல பல பேய்கள் வாழ்வதாகவும் அவை நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடமாடுவதாகவும் நம்பப்படுகிறது. இவற்றை அடக்குவதற்காகவும் முக்தி பெற வேண்டும் என்பதற்காகவும் இங்கு நள்ளிரவில் பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் இறப்பின் கடவுளாக அறியப்படும் எம பகவானுக்கு கோயில் உள்ளது. இதனால், இங்கு பேய் நடமாடுவதாக கூட சிலர் நம்புவதுண்டு.
கோவில் வரலாறு:
பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் இந்த மலையில் உள்ள கோவிலை 1787ஆம் ஆண்டு கட்டியுள்ளனர். இதை, இந்தூரின் அரிசி அஹில்யா பாய் என்ற கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கலைஞர் கட்டியுள்ளார். ஒரு தரப்பினர் இதை கூற, ஒரு தரப்பினர் ஒரு ஆவியை அமைதிப்படுத்த இந்த கோயில் கட்டப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த கோவிலுக்கு அருகில் ராமர் குளித்த தலமான ராம்குண்ட் அமைந்துள்ளது. இதில் நீராடினால் பாவங்கள் களையப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Ghost Tourism: இந்தியாவில் ‘பேய்கள்’ வாழும் சுற்றுலா பகுதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ