ஜார்ஜியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் வீட்டு Wifi கடவுச்சொல்லை மாற்றிய தனது சகோதரியை கொலை செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கெவோன் வாட்கினஸ் (வயது 18), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனது சகோதரி அலேக்ஸாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெவோனுக்கு ஜார்ஜியா நீதிமன்றம் பினை இல்லா ஆயுள் தண்டனை அளித்துள்ளது.


காவல்துறை அறிக்கையின் படி கெவோன், ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். ஓயாமல் இணையத்தில் மூழ்கியிருந்த அவரை, கட்டுப்படுத்தும் விதமாக அவரது தாயார் கெவோனை தங்கள் வீட்டு Wifi-னை பயன்படுத்தா வகையில் கண்டித்துள்ளார். எனினும் கெவோன் தாயின் சொல்லை பின்தொடர மறுத்துள்ளார்.


ஒரு கட்டத்தில் தனது சகோதரனின் ஆன்லைன் விளையாட்டின் மோகம் உச்சத்தை எட்ட, அலேக்ஸா தங்கள் வீட்டு Wifi-னை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். முதல் வேலையாக கடவுச்சொல்லை மாற்றி தனது சகோதரனுத்து தெரியா வகையில் மறைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கெவோன், அலேக்ஸாவுடன் சன்டையிட்டுள்ளார். இந்த சன்டையில் எதிர்பாரா விதமாக அலேக்ஸா உயிரிழந்துள்ளார்.


இவர்கள் இருவருக்கான சன்டைக்கு சாட்சியா இவர்களது இளைய சகோதரன் அலூசஸ் இருந்து தனது சகோதரனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.