தீபாவளி இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகையாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், ராமர் 14 வருட வனவாசத்தை முடித்து அயோத்தியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். அதே நாளில், சமணத்தின் 24 வது தீர்த்தங்கர பகவான் மகாவீரர் முக்தி அடைந்தார். இந்த பண்டிகையில், செல்வத்தின் தெய்வமான லட்சுமியை வழிபடுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நாளில் அதிர்ஷ்டங்களை வீட்டிற்குள் வரவழைக்க நாம் சில பொருட்களை வாங்க வேண்டும். அப்படி வாங்கும் பொருட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் லட்சுமி கடாட்சத்தை (Goddess Mahalakshmi) உண்டாகும். தீபாவளி பண்டிகை (Diwali 2021) நாளில் என்னென்ன பொருட்களை வாங்கலாம். வீட்டினை எப்படி தூய்மையாக வைத்திருக்கலாம் என்று பார்க்கலாம்.


ALSO READ | Hindu Tradition: வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி நோன்பு


* வீட்டின் சமையலறையில் எச்சில் பாத்திரங்களை போட்டு வைத்திருக்க கூடாது. சுத்தமில்லாத வீட்டிற்குள் மகாலட்சுமி வரமாட்டாள். குழாய்களில் தண்ணீர் சொட்டவோ சுவர்களில் ஈரம் தங்கவோ கூடாது.


* தினமும் உங்களது வீட்டில் சுத்தமான பூக்களை வைக்கவேண்டும். வாடிய பூக்களையோ செயற்கையான பூக்களையோ வைக்கக் கூடாது. வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம்.


* லட்சுமி யந்திரத்தை வாங்கி வீட்டிற்குள் வையுங்கள். புல்லாங்குழல் வைத்திருக்கும் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள். வாஸ்து தோஷங்கள் நீங்கும். லட்சுமி தேவியின் அருள் பெற்ற சங்கு வாங்கி வைப்பது நல்லது. 


* ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும்.


* தீபாவளி நாளில், லட்சுமி பூஜைக்கு இனிப்பு சேலை வழங்கி, பின்னர் அதை ஏழைகளுக்கு விநியோகிக்கவும். 


* தீபாவளி நாளில், லட்சுமி தேவியை வழிபட்ட பிறகு, கண்டிப்பாக சங்கை ஊத வேண்டும். இதைச் செய்வது வறுமையைப் போக்கும் மற்றும் லட்சுமி எப்போதும் வீட்டில் வாழத் தொடங்குவாள். 


ALSO READ | அன்னை மகாலட்சுமியின் அருளுடன் வீட்டில் என்றென்றும் செல்வம் செழிக்க வேண்டுமா..!!


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR