அன்னை மகாலட்சுமியின் அருளுடன் வீட்டில் என்றென்றும் செல்வம் செழிக்க வேண்டுமா..!!

செல்வத்தை, வளங்களை அள்ளித் தரும் அன்னை மகாலட்சுமி தனது வீட்டில் நிரந்திரமாக வாசம் செய்ய வேண்டும் என்பது, அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2021, 04:13 PM IST
அன்னை மகாலட்சுமியின் அருளுடன் வீட்டில் என்றென்றும் செல்வம் செழிக்க வேண்டுமா..!! title=

அன்னை மகாலட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருபவள். அவர் அருள் இல்லாமல் அதிர்ஷ்டம் மற்றும் செல்வமும் கிடைக்காது. அவள் அருள் யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடைக்காது என்பதை அறிந்து கொள்ளலாம். 

மகாபாரதத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்

தேவ லோகத்தின் அரசனான இந்திரன் மற்றும் மகாலட்சுமியின் உரையாடல்கள் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இதில், அன்னை லட்சுமி தேவி  யார்  வீட்டில் வசிப்பது மகிழ்ச்சியை தரும் என்பதை பற்றி எடுத்து கூறியுள்ளார். 

மகாலட்சுமியின் அருளுக்கு தகுதியானர்கள் யார்

விரதம் இருப்பவர்கள், தினமும் சூரிய உதயத்திற்கு முன் விழித்தெழுபவர்கள் ஆகியோர் வீட்டில் வாசம் செய்வது மிகவும் பிடிக்கும் என மகாலட்சுமி கூறியுள்ளார். மேலும்,  மகாலட்சுமியின் அருளைப் பெற பகலில் ஒருபோதும் தூங்க கூடாது. 

மகாலட்சுமி இந்திரனிடம், இது குறித்து விரிவாக கூறுகையில்,  நெறிதவறாத உண்மையான, அற வழியில் நடக்கு ஆண்கள் வாழும், வீட்டில், நாட்டில் நான் நீங்காமல் இருப்பேன் என   மகாலட்சுமி இந்திரனிடம் மேலும் கூறினார். 

ALSO READ | Hindu Tradition: வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி நோன்பு

 

முன்னோர்களை மதிக்கும் வீட்டில் நீங்காமல் வசிக்கும் மகாலட்சுமி

முன்னோர்களை வழிபடாதவர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களை மதிக்காதவர்கள், துர்குணங்கள் கொண்டவர்கள் இருக்கும் வீட்டில் வாசம் செய்ய மாட்டேன் என்று மகாலட்சுமி மகாபாரதத்தில் கூறியுள்ளார்.

தூய்மை இல்லாதம் வீட்டில், மகாலட்சுமி  வசிப்பதில்லை. அதனால், வீட்டில் செல்வம் செழித்தோங்க மகாலட்சுமியை மகிழ்விக்க. வீட்டை சுத்தமாக பராமரிப்பது அவசியம். 

மேலும் நீதி தவறாத நீதிமான்கள் வாழும் நாட்டில், நகரத்தில், எப்போதும் வசிக்கிறேன் எனக் கூறியுள்ள அன்னை மகாலட்சுமி. போரில் புறமுதுகிட்டு ஓடாமல்  எதிரிகளை வீழ்த்தி வீரனாக திகழும் மாவீரனுக்கு எனது ஆசி எப்போதும் உண்டு என்கின்றார் அன்னை மகாலட்சுமி.

சமையலறையில் தூய்மையாக இருந்தால், லட்சுமி வாசம் செய்வாள் 

சமையல் அறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பெரியவர்களை மதிக்காத வீடுகளீல், வீட்டில் வேலை செய்பவர்களை அலட்சியமாக நடத்தும் அவமானப்படுத்தும் வீடுகளில்  நான் வசிக்க மாட்டேன் என மகாலட்சுமி கூறியுள்ளார்.

சண்டை சச்சரவு உள்ள வீட்டில் மகலாட்சுமி வாசம் செய்வதில்லை

கணவன் மனைவி சண்டையிடும் வீடு, பெண்களை மதிக்காத வீடு, ஆண்களை மதிக்காத வீடு, வெறுப்பு உனர்ச்சி நிறைந்தவர்கள் இருக்கும் வீடு ஆகியவற்றில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள். பிறருக்கு கேடு நினைப்பவர்கள் இருக்கும் வீட்டில் நான் தங்க மாட்டேன் எனவும் மகாலட்சுமி, மகாபாரதத்தில், இந்திரனுடன் நடந்த உரையாடலில் தெரிவித்தார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ALSO READ | Tamil Rasipalan 15 September 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News