பெண்களின் மனம் எப்போதும் ஒரு புதிர் போன்றதாகவே சித்தரிக்கப்படுகிறது. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது? யாரை விரும்புகிறார்கள்? எந்த குணங்களின் அடிப்படையில் ஒருவரை காதலிப்பார்கள்? என்ற கேள்வி சகஜமாக புழக்கத்தில் இருப்பதை காண முடியும். இந்த கேள்விகள் எல்லாம் பெண்களை புரிந்து கொள்ளாதவர்கள், அவர்களின் மன ஓட்டத்தை தெரிந்து கொள்ளாதவர்களால் எழுப்பபடுகிற ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களுக்கும் ஆண்களைப் பிடிக்கும். அவர்கள் காதலை மிகவும் விரும்பக் கூடியவர்கள் தான். ஆனால், தான் விரும்பும் பெண், தன்னை விரும்ப என்ன செய்ய வேண்டும்? என்ற தெரியாமல் புழம்புவார்கள். அவர்களுக்கு சொல்வது மூன்று விஷயங்கள் தான். அவை ஏற்கனவே இருக்கக்கூடிய ஒன்று தான். இந்த உலகில் இல்லாத ஒரு விஷயத்தை எல்லாம் பெண்கள் யாரிடமும் எதிர்பார்ப்பதில்லை.  அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய மிக மிக எளிமையானது. அவை என்னவென்றால், மதிப்பு மரியாதை, சோதனை காலத்தில் தோள் கொடுத்தல், உங்களோடு இருக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக உணரவைத்தல் இவை இருந்தால் போதும். 


மேலும் படிக்க | இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள்


மதிப்பு மரியாதை


நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு பொதுவெளியிலும் தனிப்பட்ட இடத்திலும் மரியாதை கொடுங்கள். அவர்களை உங்களுக்கு இணையாக சமமாக நடத்தும் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். கேலி கிண்டல்கள் அவர்களை புன்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில் இல்லாமல் பொதுவாக இருந்தால் அந்த கிண்டல்களைக்கூட பெண்கள் ரசிப்பார்கள். எதிர்மறையான விஷயங்கள், அவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். 


உடன் இருத்தல்


எல்லோருக்கும் சில சோதனையான கால கட்டங்கள் இருக்கும். அல்லது மனதில் நீங்காத வலி உள்ள பிரச்சனைகள் இருக்கும். அந்தவகையில் நீங்கள் மனம்விட்டு பேசும்போது பெண்களும் அவர்களின் ஆசைகள், வலி உள்ளிட்டவைகளை தாராளமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அப்போது, அவர்களின் மனதை ஆற்றும் வார்த்தைகளை பேசுங்கள்.முடிந்தால் அந்த வலியை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருந்தால் அதனை முயற்சி செய்து முடிவைக் கொண்டு வாருங்கள். உங்களை அவர்களுக்கு பிடித்துப்போகும். 


நம்பிக்கை


நம்பிக்கை மிக மிக முக்கியமான ஒன்று. ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு இது கட்டாயம். நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். ஒருமுறை உங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டால்போதும் அவர்கள் உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராகிவிடுவார்கள். புத்திசாலித்தனமாக சிந்திப்பதையும், பண விஷயத்தில் கவனம் செலுத்தபவர்களையும் பெண்கள் விரும்புவார்கள்.


மேலும் படிக்க | ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு: முழு பலன் பெற இவற்றில் கவனம் தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR