தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சென்னை மற்றும் இந்தியாவின் பல இடங்களில் தங்கத்தின் விலை  (Gold Rate) அதிரடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 48 அதிகரித்து ரூ. 4507-க்கு விற்பனை ஆகிறது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4459 ஆக இருந்தது. 


ஒரு சவரன் ஆபரணத் தங்கம், நேற்று மாலை ரூ. 35,672-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 384 உயர்ந்து ரூ.36,056-க்கு விற்பனையாகிறது. 


ALSO READ: Gold Rate Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை, இன்றைய நிலவரம் இதோ!!


இன்று காலை நிலவரப்படி, வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 அதிகரித்து, 68.70 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. 


தேசிய அளவில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, பெங்களூருவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 44,400 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 48,400 ஆகவும் உள்ளது.


 ஹைதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் தங்கத்தின் விலை இதே அளவில் உள்ளது. 


ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் வெள்ளி விலை (Silver Rate) ஒரு கிலோ ரூ. 67,900 ஆகவும், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் ரூ. 63,000 ஆகவும் உள்ளது. 


சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.


கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.  மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.ஆகவும் விற்பனையில் உள்ளது. 


உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 


பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.


ALSO READ: Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR