PAN and TAN: வரி பிடிப்பு கணக்கு எண் என்றால் என்ன, அதற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

வரி பிடித்தம் தொடர்பான TDS அறிக்கையில் வருமான வரித் துறை (Income Tax Department) கொடுத்த TAN எண்ணை குறிப்பிடுவது அவசியமானது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 5, 2021, 10:28 PM IST
  • வரி பிடிப்பு கணக்கு எண் என்றால் என்ன?
  • அதற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?
  • பான் எண்ணுக்கும், டான் எண்ணுக்கும் என்ன வேறுபாடு?
PAN and TAN: வரி பிடிப்பு கணக்கு எண் என்றால் என்ன, அதற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு? title=

வருமான வரி தாக்கல் செய்பவர்கள், வரி தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அனைத்து விஷயங்களையும் தெரிந்துக் கொள்வது கடினம் என்றாலும், சில அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. பான் அட்டை, டி.டி.எஸ், வருமான வரி, வரி விலக்கு என்பது போன்ற சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களும், இன்னும் சற்று விரிவாக தெரிந்துக் கொண்டால், அது பல சிக்கல்களை தீர்த்துவிடும்.

வரி பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பான TDS அறிக்கையில் வருமான வரித் துறை (Income Tax Department) கொடுத்த TAN எண்ணை குறிப்பிடுவது அவசியமானது. வரியை வசூலிப்பவர்களுக்கு அவசியமானது டான் எண்.  

அடையாள சான்று மற்றும் பல வகையான பரிவர்த்தனைகளுக்கு PAN எண்ணை பயன்படுத்துகின்றனர். ஆனால் TAN எண்ணைப் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. TAN எண்ணும், PAN எண்ணும் ஒன்றுதான் என சிலர் தவறாக புரிந்துக் கொள்கின்றனர். 

Also Read | மாத சம்பளம் வாங்குபவர்கள் ரூ.8 லட்சம் வரை வருமான வரியை சேமிக்க முடியும்! 

PAN மற்றும் TAN எண்களிடையே என்ன வேறுபாடு உள்ளது?
PAN என்பது நிரந்தர கணக்கு எண்ணையும் TAN என்பது வரி விலக்கு கணக்கு எண்ணையும் குறிக்கிறது. வரி பிடித்தம் அல்லது வரியை டெபாசிட் செய்பவர்கள் TAN எண்ணை வைத்திருக்க வேண்டும். வருமான வரித்துறையுடனான அனைத்து டிடிஎஸ் தொடர்பான ஆவணங்கள் மற்றும் டிடிஎஸ் தொடர்பான கடிதங்களிலும் TAN எண்ணைக் குறிப்பிடுவது அவசியம்.

PAN ஐ TAN எண்ணாகப் பயன்படுத்த முடியாது. PAN எண் இல்லாமல் TAN எண் வைத்திருக்கமுடியாது. ஆனால், TAN எண் இல்லாமலும் PAN எண் வைத்திருக்கலாம். சுலபமாக சொன்னால், வரியை வசூலித்து அதை வருமான வரித்துறைக்கு கட்டுபவர்களுக்கு TAN எண் அவசியம்.

அதாவது ஒரு நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வரியை கழித்தப் பிறகு சம்பளத்தை பணியாளருக்கு வழங்கும். கழிக்கப்பட்ட வரியை வருமான வரித்துறைக்கு கட்டும்போது, நிறுவனத்தின் TAN எண் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். கழிக்கப்பட்ட வரி தொடர்பான டி.டி.எஸ் அறிக்கையில் டான் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Also Read | ITR: எளிதானது வருமான வரி தாக்கல், இனி மொபைல் செயலி மூலமே வேலை முடியும்

வருமான வரி சட்டப் பிரிவு 203 அ வின்படி "வரி மூல வசூல் அல்லது வருமான வரிப் பிடித்தம் உட்பட்ட சேவைகளை பொது மக்களுக்கு வழங்கும் அனைத்து அமைப்புகளும், நிறுவனங்களும் மற்றும் தனி நபர்களும் வருமான வரித்துறையிடம் இருந்து டான் எண்ணை பெற வேண்டும்.

தனிநபர், தனிநபர் தொழில் நிறுவனங்கள், தனி நபர்களின் சங்கம் / தனிநபர்களின் கூட்டமைப்பு / செயற்கை நீதி துறை நபர், நீதி நிறுவனம் அல்லது கிளை; நிறுவனம் அல்லது கிளை, தன்னாட்சி / சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் உட்பட்டோர் டான் எண்ணைப் பெறமுடியும்.   

வரியை பிடித்தம் செய்தவர்கள், டி.டி.எஸ் படிவத்தில் அல்லது தேவையான சான்றிதழ்களில் தனது டான் எண்ணை குறிப்பிடாவிட்டால், குறைந்தபட்சம் 1௦,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

Also Read | PAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி

TAN என்பது வரி பிடித்தம் மற்றும் வரி வசூலிப்பவர்களுக்கான கணக்கு எண் (Tax Deduction and Collection Account Number) ஆகும். இந்த 10 இலக்க ஆல்பா-எண், வரி விலக்கு கோருபவர்களுக்கும் தேவையானது, வரியை பிடித்தம் செய்பவர்களுக்கும் அவசியமானது.

வருமான வரி சட்டம் 1961 இன் பிரிவு 203A படி, அனைத்து TDS அறிக்கைகளிலும் வருமான வரித் துறை (ITD) கொடுத்த TAN எண்ணை வழங்குவது அவசியம். புதிய TAN எண்ணை எப்படி பெறுவது என்ற விவரங்களை, வருமான வரித்துறையின் www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளுங்கள். புதிய TAN எண்ணை தேட, பெயர் மற்றும் பழைய TAN எண்ணையும் பயன்படுத்தலாம்.  

டான் எண் பெற விரும்புபவர்கள், 49B என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து tin nsdlயின் இணையம் வழியாகவோ அல்லது TIN மையங்களிலோ சமர்ப்பிக்கலாம். http://tin.nsdl.com அல்லது www.incometaxindia.gov.in என்ற இணைய தளங்களில், உங்களுக்கு அருகாமையிலுள்ள TIN மையங்களை கண்டறியலாம்.  

Also Read | ITR: உதவிக்கரம் நீள்கிறது; இனி வருமான வரி செலுத்த கவலைப்பட வேண்டாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News