Gold Silver Rate Today: இன்றும் தங்கத்தின் விலையில் ஏற்றம், விலை நிலவரம் இதோ
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4448.00 அக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 35,584 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Gold / Silver Rates Today: கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4448.00 அக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 35,584 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் நேற்று ரூபாய் 4799 ரூபாய்க்கு விற்கப்பட்ட 24 காரட் ஒரு கிராம் தங்கம் (Gold) இன்று 4812 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ. 38,496.00-க்கு விற்பனையில் உள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் ரூ. 68.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி 68,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
ALSO READ: Gold Silver Rate Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ
தேசிய அளவிலும் நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, பெங்களூருவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 44,010 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 48,010 ஆகவும் உள்ளது.
ஜைதராபாதிலும் 22 கேரட் 10 கிராம் தங்கம் 44,010 ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம் 48,010 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்படுகின்றது.
வெள்ளி விலை (Silver Rate) ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ரூ. 68,200 ஆகவும் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் ரூ. 63,200 ஆகவும் உள்லது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி (Tax) வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.
ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR