Gold Rate Today: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் இதோ
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 30 அதிகரித்து ஒரு கிராம் 4458 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4428 ஆக இருந்தது.
நேற்று மாலை 35,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 240 அதிகரித்து 35,664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (Gold) விலை ரூ. 4458 ஆக உள்ளது.
ALSO READ: Gold Silver Rate Today: இன்றும் தங்கத்தின் விலையில் ஏற்றம், விலை நிலவரம் இதோ
வெள்ளியின் விலையிலும் இன்று லேசான ஏற்றத்தைக் காண முடிகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 67.70 விற்பனை ஆனது. அது இன்று கிராமிற்கு ரூ. 0.90 உயர்ந்து 68.60 என்ற விலையில் விற்பனையில் உள்ளது.
தேசிய அளவில் தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. இன்று காலை நிலவரப்படி, பெங்களூருவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 44,010 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 48,010 ஆகவும் உள்ளது.
ஹைதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் தங்க விலை நிலவரம் இதே அளவில்தான் உள்ளது.
வெள்ளி விலை (Silver Rate) ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஒரு கிலோ ரூ. 68,200 ஆகவும், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருவில் ரூ. 63,200 ஆகவும் உள்ளது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR