Gold / Silver Rates Today: கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (Gold) விலை ரூ. 4449 ஆக உள்ளது. இது நேற்று ரூ.  4464 ஆக இருந்தது. சென்னையில் நேற்று 35,712 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 35,592 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.


சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 4813-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை 38,504 ரூபாயாக உள்ளது. 


இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 67.40 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 67,400 ரூபாயாகவும் விற்பனையில் உள்ளது. 


தேசிய அளவில் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று லேசாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 46,450 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50,660 ஆகவும் உள்ளது.


ALSO READ: Gold Silver Rate Today: இன்றும் தங்கத்தின் விலையில் ஏற்றம், விலை நிலவரம் இதோ


கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 46,750 ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம் 49,450 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.  


மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 45,500 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 47,500 ஆகவும் விற்பனையில் உள்ளது. 


வெள்ளி விலை (Silver Rate) மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் ஒரு கிலோ ரூ. 63,500 ஆக உள்ளது. 


சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.


இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.


ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR