Gold Silver Rate Today: சிரிக்க வைத்த தங்கம், ரூ.36,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை!!
தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது.
Gold rates today, 7 August, 2021: கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர்.
உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 குறைந்து ரூ.4,440க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.488 குறைந்த தங்கத்தின் விலை ரூ.35,520-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளியும் இன்று விலை குறைந்துள்ளது. வெள்ளி, ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.70.00-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் பல நாட்களாக ரூ.36,000 அருகிலேயே தங்கத்தின் விலை (Gold Rate) இருந்து வந்தது. இப்போது, பல நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு கீழ் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்
தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 குறைந்து ரூ.4,440க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.488 குறைந்து ரூ.35,520க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை (Silver Rate) கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கும் விற்பனையாகிறது. பல நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதாலும், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
ALSO READ: Incredible Dress! 100 கிலோ தங்கத்தால் நெய்யப்பட்ட அற்புத திருமண ஆடை; வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR