தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கதின் விலையிலும் (Gold Rate) பெரும்பாலும் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.


இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,510-க்கும், சவரன் 36,080-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 


சென்னையில் (Chennai), வெள்ளி ஒரு கிராம் 72 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 


ALSO READ:Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன


தேசிய அளவில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .47,000 க்கு கீழே உள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ .48,000 க்கு கீழ் குறைந்துள்ளது என்று குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.


தேசிய தலைநகரில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் 46,860 ரூபாயாகவும் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் (Gold) விலை 51,120 ரூபாயாகவும் உள்ளது.


மும்பையில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.46,860 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூரூ .47,860 ஆகவும் உள்ளது.


கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலைரூ .47,260 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .49,960 ஆகவும் உள்ளது. பெங்களூரில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 44,700 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .48,770 ஆகவும் உள்ளது.


ALSO READ: Gold Rate Today: இப்போது தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR