சென்னையில் இன்று, நாளை ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai, Trains Cancelled | சென்னை தாம்பரம் செல்லக்கூடிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதாக விளக்கம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 16, 2024, 10:38 AM IST
  • சென்னை மின்சார ரயில்கள் இன்று ரத்து
  • ஆவடி செல்லும் ரயில்கள் இன்று இயங்காது
  • நாளை தாம்பரம் செல்லும் ரயில்கள் இயங்காது
சென்னையில் இன்று, நாளை ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு title=

Chennai Trains Cancelled | சென்னையில் ரயில் வழித்தடங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவடி செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவித்த தெற்கு ரயில்வே, நாளை தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் தினமும் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் இதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது தெற்கு ரயில்வே. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக ஆவடி, மூர் மார்க்கெட், சூலூர்பேட்டை, நெல்லூர் உள்ளிட்ட வழித் தடங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவை இன்று நவம்பர் 16 ரத்து செய்யப்படுமென தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இந்த பிரச்சனை இருந்தால் மகளிர் உரிமை தொகை வராது!

அதேபோல், தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை (17ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் இயக்கப்படாது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும். ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக 25 முதல் 40 நிமிட இடைவெளியில் கடற்கரை – பல்லாவரம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மாலை 5 மணிக்கு மேல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில் மூலம் தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே அதிகம். செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம், சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் இந்த ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ஒருநாள் மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டாலும் பயணிகள் பெரும் சிரமத்தையே சந்திக்க நேரிடும். இருப்பினும் பராமரிப்பு பணிகள் தவிர்க்க முடியாது என்பதால், தெற்கு ரயில்வே முன்கூட்டியே ரயில்கள் ரத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனை தெரிந்து கொண்டு ரயில் பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொண்டால் இன்றும் நாளையும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்காது. 

மேலும் படிக்க | IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டு

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News