வரலாற்றில் முதல்முறையாக மிகவும் விலை உயர்ந்த தங்கம்.. 10 கிராம் விலை 44 ஆயிரத்தை தாண்டியது
வரலாற்றில் முதல்முறையாக, தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்தது.
சென்னை: கொரோனா வைரஸ் குறித்த கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், தங்க-வெள்ளி (Gold-Silver Prices Today) விலைகள் இன்று இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உயர்ந்தன. வரலாற்றில் முதல்முறையாக, தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்தது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இன்று (புதன்கிழமை) டெல்லி சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .1,155 உயர்ந்தது. மறுபுறம் வெள்ளி (Silver) விலையில் ஒரு பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் (Silver) விலையும் ரூ .1,198 அதிகரித்துள்ளது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஏற்படுள்ள வட்டி விகிதங்கள் மாற்றம் மற்றும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக இவ்வளவு பெரிய ஏற்றம் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.
புதன்கிழமை, டெல்லி சந்தையில் தங்கத்தின் (Gold) விலை பத்து கிராம் ரூ .43,228 லிருந்து ரூ .44,383 ஆக உயர்ந்தது. செவ்வாயன்று, டெல்லியின் சரபா பஜாரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .6 அதிகரித்து 42,958 ஆக இருந்தது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ .46,531 லிருந்து அதிகரித்து ரூ .47,729 ஆக உள்ளது.
இரண்டு நாளில் தங்கத்தில் ஏற்பட்ட மாற்றம்... மேலும் படிக்க
சென்னையை பொறுத்த வரை 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 35744 ஆக உயர்ந்தது.