புதுடெல்லி: கிரகங்களின் நிலையில் பல முக்கிய மாற்றங்கள் இந்த மாதம் நிகழவுள்ளன. ஜனவரி 15 முதல், புதன் கிரகம் மகர ராசியில் வக்ர கதியில் பயணித்தது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 முதல் நேராக நகரத் தொடங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, வணிகம், பணம், புதனின் மாற்றத்திற்கு காரணமான புதன் கிரகம், மக்களின் வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. 


அதிலும், தற்போதைய புதனின் நேரடி சஞ்சாரம், 5 ராசிக்காரர்களுக்கு அருமையான பலன்களைத் தரும். வரும் மார்ச் 6ம் தேதி வரை மகர ராசியில் சஞ்சரிக்கும் புதன் கிரகம், பிறகு  கும்ப ராசிக்குள் பிரவேசிக்கும்.


ALSO READ | புதனின் சிறப்பு அருளால் சகல செல்வங்களையும் பெறும் ‘2’ ராசிகள்!


இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
பிப்ரவரி 4 முதல் புதனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் 6 வரை அபரிமிதமான பலன்களைத் தருவார் புதன் பகவான்.


மேஷம் – புதனின் சஞ்சாரம், மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணம் மற்றும் பொருளாதார நிலை மேம்படும். சிரமங்கள் நீங்கும்.


ரிஷபம்: புதன் சஞ்சாரம், ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபத்தைக் கொடுக்கும். பேச்சு மற்றும் தகவல் தொடர்பு தொழிலில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து குவியும். தொழிலில் ரிஷபக் காரர்களின் பேச்சு பலன் தரும். பயணங்கள் சாதகமாக இருக்கும்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சஞ்சாரம் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும். இனிமையாகப் பேசுவதன் மூலம் பல காரியங்களைச் சாதிக்கலாம். நல்ல பேச்சு தொழிலில் லாபம் தரும். பொருளாதார நன்மைகள் உண்டாகும்.


ALSO READ | இன்றும் தொடரும் தை அமாவாசை தர்பணம்! காரணம் இதுதான்


மகரம் - இந்த ராசியில் நீச்சம் பெற்றுக்கும் புதனின் சஞ்சாரம், மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டைகள் அகலும், வருமானமும் அதிகரிக்கும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு புதனின் நேரடி சஞ்சாரம் தொழிலில் நன்மைகளை தரும். கௌரவம் கூடும், பதவி உயர்வும் கிடைக்கும். வருமானம் கூடும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். பயணங்கள் அதிகரிக்கும், அவை லாபகரமானதாக இருக்கும்.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR