Astrology: புதனின் சிறப்பு அருளால் சகல செல்வங்களையும் பெறும் ‘2’ ராசிகள்!

ஜோதிடத்தில் 9 கிரகங்கள், அதன் நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி கணிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 06:19 PM IST
Astrology: புதனின் சிறப்பு அருளால் சகல  செல்வங்களையும் பெறும் ‘2’ ராசிகள்! title=

ஜோதிடத்தில் 9 கிரகங்கள், அதன் நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி கணிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகம் கல்வி, அறிவு மற்றும் ஞானத்தின் அதிபதியாக கருதப்படுகிறது. எனவே புதனின் அருளால் கல்வி, வியாபாரம், சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  இரண்டு ராசிக்காரர்களுக்கும் புதனின் சிறப்பு அருள் இருப்பதால், அவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் அடைகிறார்கள்

ஜோதிட சாஸ்திரத்தில், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன் கிரகம் என கூறப்பட்டுள்ளது. புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி மீது அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் புதனின் சிறப்பு அருள் பெரும் பாக்கியம் கிடைப்பதற்கு இதுவே காரணம். மேலும், புத பகவனின் அருளால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதில்லை.

மிதுன ராசி

இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பர்கள் என நம்பப்படுகிறது. இவர்களுக்குள் பல வகையான திறமைகள் ஒளிந்திருக்கும். மேலும், காதல் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தைரியமாக எதிர்கொள்கின்றனர். இது தவிர, புதன் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் தொடர்பான முயற்சிகளில், தங்கள் அறிவு திறமையினால் வெற்றி பெறுவார்கள்.

ALSO READ | Monthly Horoscope: பதவி உயர்வு, பண வரவு: இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பிரமாதம்!! 

கன்னி ராசி

இந்த ராசிக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்படுவார்கள். ஆனால் இவர்கள் மனம் வெள்ளையானது. கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளால் ஒருவரை மிக விரைவாக ஈர்க்கிறார்கள். இந்த ராசியில் புதன் கிரகம் வலுவாக உள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் எல்லா சுகங்களையும் பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிப்பதில் மற்றவர்களை விட முன்னிலையில் இருப்பார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சிக்காக வெளிப்படையாக பணத்தை செலவிடுகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News