7th Pay Commission: DA அதிகரிப்பு, நிலுவை தொகை குறித்த அறிவிப்பு வெளியானது!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR தொகை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR தொகை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.
ஜனவரி, 2022 முதல் மத்திய ஊழியர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 3% அதிகரிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஊழியர்களுக்கு மோடி அரசு பெரும் நிவாரணம் அளிக்கு வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) 3% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 2021 அக்டோபரில், மத்திய அரசு ஊழியர்களின் DA 28% என்ற அளவில் இருந்து 31% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த உயர்வுக்குப் பிறகு, டிஏ 31 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படுமா?
மத்திய ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்துடன் புதிய அகவிலைப்படி முழுமையாக வழங்கப்படும். ஏப்ரல் மாதத்தில், கடந்த 3 மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களுக்கு ரூ.73,440 முதல் ரூ.2,32,152 20 வரையிலான நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஹோலிக்கு முன்பே, அரசாங்கம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீட்டில் பெரிய மாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR