7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு
புத்தாண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவுள்ளன
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். புத்தாண்டில் மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு, HRA மற்றும் TA பதவி உயர்வு என்று நல்ல செய்திகள் வந்த நிலையில், இப்போது புத்தாண்டில் மீண்டும் அவர்களுக்கு பரிசு காத்துக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
முன்னதாக 2016 ஆம் ஆண்டில், பொருத்துதல் காரணி (Fitment Factor) அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டில் 7வது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6000லிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இப்போது 2022 ஆம் ஆண்டில் மத்திய ஊழியர்களின் (CG employees salary) சம்பளத்தை அரசாங்கம் மீண்டும் உயர்த்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டின் தொடக்கத்தில் மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கலாம். இதனால் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மீண்டும் உயரும்.
மத்திய ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்குக்கும் மேல் உயர்த்தும் காரணிதான் ஃபிட்மென்ட் காரணி. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் அவர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் தவிர ஃபிட்மென்ட் காரணி மூலம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. பிப்ரவரி 1, 2022 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் உயரும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் = ரூ 18,000
அலவன்ஸ்கள் தவிர்த்து சம்பளம் = 18,000 X 2.57 = ரூ 46,260.
26000X3 = ரூ.78000 3% அடிப்படையில்
மொத்தத் தொகை = 78000-46,260 = 31,740
ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 14,4200 வரை அரியர் கிடைக்கும்
அதாவது, ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளம் 31,740 ரூபாய் அதிகரிக்கும். இந்த கணக்கீடு குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் உள்ளவர்களுக்கு இந்தத் தொகை மேலும் அதிகமாக இருக்கும்.
பட்ஜெட் வரைவில் சேர்க்கப்படலாம்
மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணிக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறலாம். வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, இது பட்ஜெட் செலவினத்தில் சேர்க்கலாம். ஆனால் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தால், பட்ஜெட் வரைவில் இதை சேர்க்கத் தேவையில்லை என்பது குறிபிடத்தக்கது.
சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்
ஃபிட்மென்ட் காரணி (Central govt employee Fitment factor) அங்கீகரிக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். உண்மையில், பொருத்துதல் காரணியில் ஏற்படும் அதிகரிப்பானது, குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கும். தற்போது, பணியாளர்கள் 2.57 சதவீத ஃபிட்மென்ட் காரணியின் அடிப்படையில் (Salary under fitment factor) சம்பளம் பெறுகின்றனர். இப்போது அதை 3.68 சதவீதமாக உயர்த்துவதற்கான விவாதம் நடந்து வருகிறது.
அரசாங்கம் ஃபிட்மென்ட் காரணியை 3 மடங்கு அதிகரித்தால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18000ல் இருந்து ரூ.21000 ஆக உயரும். அமைச்சரவை செயலாளருடனான ஊழியர் சங்க கூட்டத்திலும் இதற்கான உறுதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல்கள் உண்மையானால், அரசாங்கம் இப்போது பொருத்துதல் காரணி தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
புத்தாண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவுள்ளன.
ALSO READ | மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி! யாருக்கு பலன் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR