SBI Kisan Credit Card: கடன் அட்டையில் 3 லட்ச ரூபாய் கடன் வசதி
எஸ்பிஐ வங்கியின் கிசான் கிரெடிட் கார்டில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்
எஸ்பிஐ வங்கியின் கிசான் கிரெடிட் கார்டில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும் என்ற செய்தி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசாங்கம் தொடங்கியது. கிசான் கடன் அட்டைகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.
உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாயப் பொருட்களை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு கடன் வழங்குவதே இந்த கடன் அட்டையின் அடிப்படை நோக்கம் ஆகும். மேலும், அதிக வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் கடன் வாங்கி, வாழ்க்கையில் சிரமப்படாமல் இருக்க அரசின் இந்த கடன் அட்டை திட்டம் உதவியாக இருக்கிறது.
தற்போது எஸ்.பி.ஐ வங்கியின் கிசான் கிரெடிட் கார்டு மூலம், விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்பது விவசாயிகளுக்கு நிம்மதியைத் தருகிறது.
ALSO READ | PM Kisan: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இரட்டை நன்மை பெற இதை செய்யுங்கள்!
பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டத்தின் (PM Kisan Yojana) மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி தொடங்கியது.
பிரதமர் கிசான் யோஜனாவுடன் (PM Kisan Yojana) திட்டத்தில் கிசான் கிரெடிட் கார்டை இணைத்த அரசு, இரண்டரை கோடி விவசாயிகளுக்கு இந்த கடன் அட்டையை வழங்குவதாக அறிவித்திருந்தது.
கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பவர் விவசாயாக இருக்க வேண்டும். 18 முதல் 75 வயதுக்கு உட்பட்ட விவசாயிகள் இந்த கடன் அட்டையைப் பெற தகுதி உடையவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிசான் கடன் அட்டையை பெற வேண்டுமானால், இணை விண்ணப்பதாரருடன் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும்.
Also Read | தனித்து வசிக்கும் பெண்கள் ரேஷன் அட்டையை சுலபமாக பெறும் வழிமுறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR