Ration Card: தனித்து வசிக்கும் பெண்கள் ரேஷன் அட்டையை சுலபமாக பெறும் வழிமுறை

விவாகரத்து ஆன பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என தனித்து வாழும் பெண்கள் எவ்வாறு குடும்ப அட்டையைப் பெறுவது? தமிழக அரசின் விளக்கம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 29, 2021, 08:46 AM IST
  • தனித்து வசிக்கும் பெண்கள் ரேஷன் அட்டை வாங்கலாம்
  • எப்படி பெறுவது?
  • தமிழக அரசு விளக்கம்
Ration Card: தனித்து வசிக்கும் பெண்கள் ரேஷன் அட்டையை சுலபமாக பெறும் வழிமுறை title=

சென்னை: பொதுமக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் விதமாக மாநில அரசுகள் பொதுவிநியோகத்துறை மூலம் ரேஷன் அட்டைகள் மூலம் உதவி வருகிறது. ஏழை மக்களின் பசியை ஆற்றும் மிகப் பெரிய ஆற்றும் பணியில் ரேஷன் அட்டைகளின் பங்கு மிகவும் முக்கியமானது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைகளின் பெயரே குடும்ப அட்டை என்று அறியப்படுவதில் இருந்து, குடும்பத்திற்கும், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்குமான தொடர்பை அறிந்துக் கொள்ளலாம். ஆனால், தனித்து வாழும்  பெண்கள் எப்படி தனியாக ரேசன் அட்டை வாங்குவது என்பது குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பு.

இதுபோன்ற குழப்பங்களை தீர்க்கும் விதமாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது. அதில் விவாகரத்து ஆண பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என தனித்து வாழும் பெண்கள் எவ்வாறு குடும்ப அட்டையைப் பெறுவது என்பது விரிவாக கூறப்பட்டுள்ளது.

Read Also | புதிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்கும். ஆனால், அப்பெண்மணியின் பெயரை நீக்க இணைய வழியில் விண்ணப்பிக்க கணவர் முன்வராத நிலையிலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட பெண் குடும்ப அட்டை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், தனித்து வாழும் பெண்ணின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது”.

”எனவே, தனியாக வசிக்கும் பெண், கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்க்கை முறிந்து தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண், கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்யப்படுவதன் மூலம் ரேஷன் அட்டையை தனியாக வசிக்கும் பெண் பெறலாம்”.

“அதற்கு பெண் எழுத்து மூலமான வாக்குமூலத்தை, சம்மந்தப்பட்ட அலுவலரிடம் கொடுக்க வேண்டும். அதிகாரி, தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கலாம். தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி, புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also | கூலித் தொழிலாளியின் மகன் IITயில் படிக்க தமிழக அரசு நிதியுதவி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News