புதுடெல்லி: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் சான்றிதழ் வழங்குவதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். ஓய்வூதியம் பெற, ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்கும் தேதியை டிசம்பர் 31-ம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளதாக மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்க்கும் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் (Central Minister) தெரிவித்துள்ளார். 


கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.  


வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
செய்தியின்படி, ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளின் கிளைகளுக்கு நேரடியாக சென்றோ அல்லது டிஜிட்டல் முறையில் ஆன்லைனிலோ இந்த ஆயுள் சான்றிதழை நீட்டிக்கப்பட்ட தேதியில் சமர்ப்பிக்கலாம் என்று சிங் தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், தங்கள் கிளைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், சமூக விலகல் நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவும் போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.


நேரடியாக வங்கிக்கு செல்ல விரும்பாவிட்டால், 12 பொதுத்துறை வங்கிகளின் வீட்டு வாசல் வங்கிச் சேவை மூலமாகவும் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். அத்தகைய 12 வங்கிகளில்- SBI (State Bank of India), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB), பேங்க் ஆஃப் இந்தியா (BoI), கனரா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றிலிருந்து இந்த வசதியைப் பெறலாம். இது கட்டண சேவை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | குடும்பத்தில் மகளை விட மருமகளுக்கு அதிக உரிமை உண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு


டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்


இந்திய அரசாங்கத்தின் https://jeevanpramaan.gov.in/ ஆயுள் சான்றிதழ் போர்ட்டலில் இருந்து டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் பெறலாம். இணையதளத்தில் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மூலம் டிஜிட்டல் சான்றிதழை (Digital Certificate) உருவாக்கலாம். வீட்டில் இருந்தபடியே, மார்போ சாதனத்துடன் (Morpho device) மொபைலை இணைத்து இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.


ஆதார்,  செல்போன் எண், 13 இலக்க ஓய்வூதிய எண், ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களுடன் கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்து கொள்ளலாம். 


மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையினையும் ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


நேரடியாக வர இயலாதவர்கள் அருகில் உள்ள தபால்காரர்களை தொடர்புகொண்டு வீட்டில் இருந்தே சேவை பெறலாம். ஆயுள் சான்றிதழ்களை பெறுவதற்கு டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.


READ ALSO | வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு புதிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR