RBI New Guidelines: கடன் வாங்குபவர்கள், வழங்குபவர்களுக்கு நல்ல செய்தி, புதிய விதிகள் அறிமுகம்
RBI New Guidelines: டிஜிட்டல் லெண்டிங் வழிகாட்டுதல்கள் தொடர்பான புதிய கொள்கையை ஆர்பிஐ கொண்டு வருகிறது.
புதுடெல்லி: வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்களில் கடன் வழங்கும் பல செயலிகள் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் ஒரு நொடியில் கடன்களை வழங்குகின்றன. ஆனால் கடனை திரும்பப்பெறும் போது இந்த செயலிகள் தங்கள் இஷ்டத்துக்கு பல அடாவடியான செயல்களையும் செய்கின்றன.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. சில சமயங்களில் தேவைக்கு அதிகமாக திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. சமீப காலங்களில் இப்படிப்பட்ட செயலிகள் குறித்து வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்து பல புகார்களும் வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, இந்திய ரிசர்வ் வங்கி பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இத்தகைய செயலிகள் மற்றும் அவற்றின் தன்னிச்சையான தன்மையைக் கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்கள் தொடர்பான புதிய கொள்கையை அறிமுகப்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் இந்த தகவலை தெரிவித்தார்
நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு இந்தத் தகவலை அளித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், டிஜிட்டல் கடன் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று கூறினார். இதன் மூலம் விரைவாக கடன் அளித்து, தன்னிச்சையாக தொகையை திரும்பப்பெறும் நிறுவனங்கள் மீது கண்காணிப்பு அதிகமாகும்.
மேலும் படிக்க | நம்மை எப்படி வியாபாரிகள் பொருட்களை வாங்க வைக்கிறார்கள்?
டிஜிட்டல் கடன் வழங்குதல் தொடர்பாக பெறப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான உள் விவாதத்திற்குப் பிறகு விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் பிஎன்பிஎல்-க்கும் பொருந்தும்
ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை பிஎன்பிஎல்-க்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, சரிபார்க்கப்பட்ட ஃபின்டெக் நிறுவனங்கள் மட்டுமே கடன் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மீது நிறுவனங்களின் தன்னிச்சையான போக்கு இருக்காது.
எனவே, ஆர்பிஐ இந்த புதிய கொள்கையின் கீழ் பை-நவ்-அண்ட்-பே-லேட்டர் உட்பட அனைத்து ஃபிண்டெக் நிறுவனங்களையும் கொண்டு வர விரும்புகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடன் தருவதாகக் கூறும் இந்த சிறிய ஆப்ஸ்கள் மற்றும் கடன் கொடுத்த பிறகு தங்கள் இஷ்டப்படி வசூலிக்கும் விதம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல், இந்த வழிகாட்டுதல்கள் பாரத் பே மற்றும் பிஎன்பிஎல் நிறுவனங்களான யுஎன்ஐ, கேபிடல் ஃப்ளோட், ஸ்லைஸ், ஸெஸ்ட்மணி, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மேலும் படிக்க | Bank Holiday: இந்த வாரம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR