அடிச்சது ஜாக்பாட்.. முதலீடு செய்யாமலே மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்கும்
கட்டுமானத் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஹரியானா அரசு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்களுக்கும், சேமிப்பு என்ற பெயரில் எதையும் சேமிக்க முடியாதவர்கள். இருப்பவர்களுக்கும். அந்த வகையில் தான் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் இருக்கும். வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தாலும், முதுமையில் வருமானம் எதுவும் கிடைக்காததால், பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. இப்பிரச்னைகளை தீர்க்க, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தற்போது ஹரியானா மாநில அரசால் செயல்படுத்தப்படும் அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி தான் இன்று நாம் காண போகிறோம்.
திட்டத்தை பற்றி முழு விவரம்:
இத்திட்டத்தின் பெயர் “நிர்மான் காம்கர் பென்ஷன் யோஜனா” ஆகும். இந்த திட்டத்தின் படி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக 3000 ரூபாய் வழங்கப்படுகிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பலன்களைப் பெறலாம். மேலும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பதாரர் தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினராக இருப்பது கட்டாயமாகும். இது தவிர, விண்ணப்பதாரர் வேறு எந்த துறை/கார்ப்பரேஷன்/போர்டு திட்டத்தில் பயனாளியாக இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தபால் அலுவலகத்தின் டபுள் ஜாக்பாட் திட்டம்.. ரூ.10,51,175 கிடைக்கும்
எவ்வாறு பயன் பெறுவது?
இந்த திட்டத்தின் பலனை நீங்கள் பெற வேண்டுமானால் அந்தோதயா சாரல் போர்ட்டலுக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சில ஆவணங்கள் தேவைப்படும். பட்டியலில் ஹரியானாவின் வசிப்பிடச் சான்று/நிரந்தரச் சான்றிதழ், வங்கி விவரங்கள், ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், கட்டுமானத் தொழிலாளர் வாரிய பதிவு எண், பாஸ்போர்ட் அளவு போட்டோ, பணிச் சீட்டு, வயதுச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகியவை அடங்கும்.
ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது:
* ஹரியானா நிர்மான் காம்கர் பென்ஷன் யோஜனாவின் பலன்களைப் பெற, விண்ணப்பதாரர் முதலில் https://saralharyana.gov.in/citizenRegistration.html இல் சென்று பதிவு செய்ய வேண்டும் .
* பதிவு செய்ய , பின்வரும் விவரங்களை நிரப்ப வேண்டும்:-
விண்ணப்பதாரரின் பெயர்.
மின்னஞ்சல் முகவரி.
ஆதார் அட்டை.
கைபேசி எண்.
மாநில பெயர்.
* பதிவுசெய்த பிறகு , விண்ணப்பதாரர் மொபைலில் பெறப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொற்களைக் கொண்டு உள்நுழைய வேண்டும் .
* போர்ட்டலில் உள்நுழைந்த பிறகு , ஹரியானா நிர்மான் காம்கர் பென்ஷன் யோஜனா திட்டங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
* விண்ணப்பத்தின் விவரங்களை சரியாக பூர்த்தி செய்த பிறகு, தேவையான ஆவணங்களை போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.
* விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
* சரிபார்த்த பிறகு, பயனாளியின் வங்கிக் கணக்கில் மாதம் ஓய்வூதியமாக 3,000/- அனுப்பப்படும்.
* விண்ணப்பதாரர்கள் அந்தோத்யா சரல் போர்ட்டலில் கிடைக்கும் ட்ராக் அப்ளிகேஷன் மூலம் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம் .
* மேலும், பயனாளிகள் தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 9954699899 என்ற எண்ணுக்கு SARAL<Space>விண்ணப்ப ஐடியை எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் விண்ணப்ப நிலையை ஆஃப்லைனில் சரிபார்க்கலாம்.
இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளமான saralharyana.gov.in ஐப் பார்வையிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ